இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு பல்வேறு அறிகுறிகள் கூறப்பட்டாலும், சளி என்பது பொதுவான அறிகுறியாக உள்ளது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்று, சாதாரண சளி என்ற எண்ணமும் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து நிதி அயோக்கின் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் புதன்கிழமை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். ஒமிக்ரான் வைரஸால் உருவாகும் சளி சாதாரணமானது அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
ALSO READ | Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம்
தடுப்பூசி மற்றும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய அவர், ஒமிக்ரான் பரவலைக் குறைக்கும் பொறுப்பு மக்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிரான பலனைக் கொடுப்பதாகவும், கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். ஒமிக்ரானை லேசான பாதிப்பு கொண்ட வைரஸ் என வகைப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பும் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது. டெட்ரோஸ் அதானோம் பேசுகையில், டெல்டாவுடன் ஒப்பிடும்போது லேசான பாதிப்பு கொண்டதாக அறியப்பட்டாலும், அதனை லேசானா வேரியண்ட் என வகைப்படுத்துவது தவறு எனக் கூறினார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. புதன்கிழமை வெளியிட்ட தகவல்களின்படி 1,94,720 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 442 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ | பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR