ஆக்சிஜன் இருப்பை பாதுகாத்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேவையான அளவு ஆக்சிஜனை வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2022, 08:16 PM IST
  • கடந்த ஆண்டுகளில் போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.
  • அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு மாநில அரசுகளிடம் ஆக்சிஜனை வைத்திருக்க கடிதம் அனுப்பியுள்ளது.
ஆக்சிஜன் இருப்பை பாதுகாத்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை! title=

கொரோனாவின் தாக்கம் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.  கடந்த ஆண்டுகளில் போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.  அந்த நிலைமை போல் தற்போது வந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு மாநில அரசுகளிடம் போதுமான ஆக்சிஜனை வைத்திருக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

ALSO READ | Omicron முக்கிய செய்தி: ஜலதோஷமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா? ஆய்வில் தகவல்

மாநில அரசுகளுக்கும், யூனியன் நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, " ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலைகள் சரியாக செயல்பட்டு வருகிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.  தனியார் மருத்துவமனைகளில் இருந்து உரிய நேரத்தில் ஆக்சிஜனை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யவேண்டும்.  மேலும் உள்நோயாளிகளை கொண்டுள்ள மருத்துவமனைகளில் குறைந்ததாக 48 மணி நேரம் வரை நீடிக்கும் வகையில் ஆக்சிஜன் வைத்திருக்க வேண்டும்.

திரவ ஆக்சிஜன் டேங்குகளில் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சரிபார்த்து கொண்டே இருக்க வேண்டும், அவை குறையும்பட்சத்தில் அதனை உடனடியாக நிரப்பிவிட ஏற்பாடு செய்ய வேண்டும்.  மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் முழுமையாக நிரப்பப்பட்டு அவை எப்போதும் பயன்படுத்தகூடிய வகையில்  தயார்நிலையில் இருக்க வேண்டும்.  ஆக்சிஜனை முறையாக பயன்படுத்த பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளித்திருக்க வேண்டும்.

அனைத்து ஆக்சிஜன் கருவிகளும் சரியான நிலையில் உள்ளதா, என்பதை தினமும் கவனிக்க வேண்டும்.  அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள வென்டிலேட்டர் போன்ற உயிரை காப்பதும் கருவிகளில் பழுது உள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வழங்குவதில் தடை எதுவும் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.  ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க ஆக்சிஜன் கட்டுப்பாடு அறைகள் புதுப்பிக்கப்பட்ட வேண்டும், எந்நேரமும் இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும்"  என்று கூறியுள்ளார்.

ALSO READ | Omicron முக்கிய செய்தி: ஜலதோஷமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா? ஆய்வில் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விoளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News