Manipur Latest News: கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்ட்டி மற்றும் குகி குக்கி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக் காரணமாக கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். இன்னும் அங்கு தொடர்ந்து வன்முறை அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களாக, ஜிரிபாமில் புதிய வன்முறைகள் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எதிர்கட்சிகள் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் மணிப்பூர் வன்முறை குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.


மணிப்பூர் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் -மோகன் பகவத் வலியுறுத்தல்


நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘கார்யகர்த்தா விகாஸ் வர்க்- த்விதியா’ நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மோகன் பகவத், 'பல்வேறு இடங்களிலும் சமூகத்திலும் ஏற்படும் மோதல்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்றார். மணிப்பூர் கடந்த ஒரு வருடமாக அமைதிக்காக காத்திருக்கிறது. மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றார்.


தற்போது மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை கருத்தில் கொண்டு அதற்கு முன்னுரிமை அளித்து தேர்வு காண வேண்டும். தேர்தல் பேச்சு வார்த்தைகளில் இருந்து விடுபட்டு தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார். 


மேலும் படிக்க - PM Modi: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து... எதற்கு தெரியுமா?


மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? -ப.சிதம்பரம் கேள்வி


அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் (x) பக்கத்தில், "ஜூன் 12 முதல் ஜூன் 14 க்கு இடைப்பட்ட நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி-7 மாநாடு கூட்டத்திற்காக இத்தாலிக்கு செல்லவுள்ளார். 


தனது தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசிக்கு செல்ல உள்ளார். அதெல்லாம் நல்லதுதான், ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.



காங்கிரஸ் கட்சி பொறுப்பான மற்றும் விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் -ப.சிதம்பரம் 


தனது மற்றொரு டிவிட்டில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. சிலருக்கு அவர்களிடம் இருந்த அதே இலாகாக்கள், சிலருக்குப் புதிய இலாகாக்கள் தரப்பட்டிருக்கின்றன. இது மோடி 3.0 என்று சிலர் வர்ணிக்கிறார்கள், ஆனால் இது மோடி 2.1 போன்று தெரிகிறது! 


அது எவ்வாறு இருந்தாலும், நம்மைப் பொறுத்த வரை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் ஒரு பொறுப்பான மற்றும் விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் எனப் பதிவிட்டுள்ளார். 



மேலும் படிக்க - மணிப்பூர் நிர்வாண சம்பவத்தன்று மற்றொரு கொடூரம்... 2 இளம்பெண்களை சிதைத்த வன்முறையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ