புதுடெல்லி: இந்தியாவில் தேர்தல் தொடங்கிவிட்டது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைத்த பிறகு தேர்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும். இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்த விவகாரம் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.
 
பிரதமர் மோடியின் கட்சிக்கு கணிசமான நன்கொடை கொடுத்த நன்கொடையாளர்களில் வேதாந்தா, ரிலையன்ஸ் ஆகியவை உட்பட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அடங்கும். நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் பயனாளிகளின் பெயர்கள் சர்ச்சைக்குரிய நிதி அமைப்புமுறையின் கீழ் முதல் முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு மேகா இன்ஜினியரிங், ரிலையன்ஸ் துணை நிறுவனமான க்விக் சப்ளை செயின் (Qwik Supply Chain), எம்கேஜே எண்டர்பிரைசஸ் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் அடங்கும் என்று பகிரங்கப்படுத்தப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.


உச்சமன்றம் ஆணையின்படி, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவுகளில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை வழங்கியவர்களில் மேகா இன்ஜினியரிங் மற்றும் அதன் துணை நிறுவனங்களான வேதாந்தா மற்றும் எம்கேஜே எண்டர்பிரைசஸ் ஆகியவை அடங்கும்.


கார்ப்பரேட் அரசியல் நன்கொடையாளர்கள் மற்றும் சர்ச்சைக்குரிய நிதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் பயனாளிகளின் பெயர்கள் முதன்முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் பத்திரங்கள் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற மற்றும் அநாமதேய நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி யார் என்றால் ஆளும் கட்சியான பாஜக இருப்பது தெரியவந்துள்ளது. ஜனவரி 2018 மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் விற்கப்பட்ட மொத்த பத்திரங்களின் மதிப்பு 165 பில்லியன் ரூபாய்கள் என்றால், இந்த தொகையில் கிட்டத்தட்ட பாதியை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம்!
 
தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சட்ட அமர்வு இந்த திட்டம் குறித்த பல கேள்விகளை எழுப்பியது. 


கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் யார் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது, அவர்களின் அடிப்படை உரிமை என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையே அதுதானே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துக்கும் எதிரானது என்றும் கூறிய சட்ட அமர்வு, தேர்தல் பத்திரத்துக்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனிகள் சட்டம், வருமான வரி சட்டம் ஆகியவற்றில் செய்த திருத்தங்களும் செல்லாது என்று கூறிவிட்டது. 


தேர்தல் பத்திரங்கள் விற்பதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா நிறுத்தவேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் வங்கி தரவேண்டும் என்று உத்தரவிட்டதை அடுத்து வெளியான தரவுகளில்,  ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக மொத்தம் 16,518.11 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது வெளியானது. 


மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி 6,565 கோடி ரூபாய், எதிர்கட்சியான காங்கிரஸ் 1,547 கோடி ரூபாய், திரிணமுல் காங்., 823 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 367 கோடி ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் 231 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. அத்துடன் அரசியல் கட்சிகளால் சராசரியாக பெறப்பட்ட மொத்த நன்கொடைகளில் பாதிக்கும் அதிகம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக தெரியவந்தது.  


மேலும் படிக்க | கோவையில் அண்ணாமலை... தென் சென்னையில் தமிழிசை - பாஜக வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!


இந்த நிலையில், நன்கொடையாளர்கள் யார் என்பது தொடர்பாக வெளியான தரவுகளில், மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் அதன் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான வெஸ்டர்ன் யுபி டிரான்ஸ்மிஷன் நிறுவனமும் இணைந்து 2019 ஏப்ரல் முதல் 6.64 பில்லியன் ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பாஜகவுக்கு வழங்கியுள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான Qwik Supply Chain பாஜகவுக்கு 3.75 பில்லியன் ரூபாயும், MKJ Enterprises மற்றும் Keventer உள்ளிட்ட மதன்லால் குழுமம் 3.93 பில்லியன் ரூபாயும் வழங்கிய நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் வேதாந்தா 2.54 பில்லியன் ரூபாயும், ஏர்டெல் 2.1 பில்லியன் ரூபாயும் கட்சிக்கு வழங்கியது என்றால், காங்கிரஸ் கட்சிக்கு, மதன்லால் குழும நிறுவனங்கள் 1.72 பில்லியன் ரூபாய் வழங்கியுள்ளன. மேகா இன்ஜினியரிங் மற்றும் அதன் துணை நிறுவனம் 1.37 பில்லியன் ரூபாயும், வேதாந்தா1.25 பில்லியன் ரூபாயும் நன்கொடை கொடுத்துள்ளன.


தமிழகத்தை சேர்ந்த லாட்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சாண்டியாகோ மார்ட்டின், நன்கொடை கொடுத்துள்ளார். மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலா 5 பில்லியன் ரூபாயை நன்கொடை கொடுத்துள்ளது. மார்ட்டின் நிறுவனம் பாஜகவுக்கு 1 பில்லியன் ரூபாயும், காங்கிரஸுக்கு 500 மில்லியன் ரூபாயும் நன்கொடையாக வழங்கியது.


தேர்தல் பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் நன்கொடைகளைத் தவிர, மக்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் நேரடியாகவும் நன்கொடைகளை கட்சிகள் பெறுகின்றன. இதிலும், பாஜகவே அதிக நன்கொடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மார்ச் 2023 நிலவரப்படி, கடைசியாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, காங்கிரஸ் கட்சியை விட பத்து மடங்கு அதிக நன்கொடைகளை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | No Cost EMI: வாடிக்கையாளர்களை கவரும் வட்டியில்லா கடன் தவணை! செயலாக்க கட்டணம் இல்லையா?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ