நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம்!

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம் : பழைய வீடியோ வைரல் ஆனதால் வேட்பாளர் மாற்றம் என தகவல் 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 22, 2024, 10:30 AM IST
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம்! title=

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக சார்பில் கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தியை வேட்பாளராக கடந்த 18ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில்  கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவில் திடீரென கட்சியின் வேட்பாளரை மாற்றி ஈஸ்வரன் அறிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு தற்போது நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள மாதேஸ்வரனை வேட்பாளராக நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். மாதேஸ்வரன்  கடந்த 2012 முதல் தற்போது வரை கொமதேக மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், அவசர ஆட்சிமன்ற கூட்டம் நள்ளிரவில் நடைபெற்றது. இதில் கலந்தாலோசனை செய்து வேட்பாளர் மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவித்த உடன் தேர்தல் பணிகளை தொண்டர்கள் துவங்கி இருந்தனர். குறிப்பாக துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பது, சுவரொவியங்கள் ஆகியவற்றை தொண்டர்கள் செய்திருந்த நிலையில், தற்போது திடீரென வேட்பாளர் மாற்றப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். 

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன?

இதற்கான காரணம் என்னவென்றால்,  சூரிய மூர்த்தி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து கடந்த 2008-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில், பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்போது அவர் பேசியதற்காக ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021 -ம் ஆண்டு வழக்கு முடிவடைந்து சூர்ய மூர்த்தி குற்றமற்றவர் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கில் இருந்து அவரை விடுவித்தது. இந்த சூழலில் அப்போது பேசிய வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆனதால்  சூரிய மூர்த்தி வேட்பாளராக போட்டியிட்டால் பட்டியலின மக்களின் வாக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற காரணத்தால் வேட்பாளரை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. மார் 20ம் தேதிமுதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன.

மேலும் படிக்க | உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News