Former Prime Minister Dr Manmohan Singh Death: அரசியலில் இருந்துக்கொண்டு அரசியல் செய்யாமல், அநாகரிகமாக பேசாமல், வெறுப்பை விதைக்காமல், ஜனநாயகரீதியில் செயல்பட்டவர். மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டவர், எதிர்க்கட்சிகளால் அதிகம் டிரோல் செய்யப்பட்டவர் தான் டாக்டர் மன்மோகன் சிங். உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய 92 வது வயதில் காலமானார். வாருங்கள் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் வாழ்க்கையைப் பற்றியும், அவர் எடுத்த முக்கியமான முடிவுகள் குறித்தும் தெரிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த ஊர்


1932 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவினுடைய பஞ்சாப் மாகாணத்தில் பிறக்கிறார் டாக்டர் மன்மோகன் சிங். அவர் பிறந்த கஹ் (Gah) என்ற ஊர், தற்போது பாகிஸ்தானியேல் இருக்கிறது. அதாவது 1947-ல் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது மன்மோகன் சிங் குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். 1948 ஆம் ஆண்டு பஞ்சாப் அமிர்தசரஸுக்கு இடம் பெயர்ந்தனர். அவர் இளம் வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார். தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். 


டாக்டர் மன்மோகன் சிங் பள்ளி படிப்பு


அவரது ஆரம்பப் பள்ளிப் படிப்பு 10 வயது வரை உருது மொழியில் இருந்தது. அதன் பிறகு அவர் பெஷாவரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் பள்ளிப்பருவத்தில் இருந்தே அவர் திறமையான மாணவராக இருந்துள்ளார். பின்னர் அமிர்தசரஸில் உள்ள இந்துக் கல்லூரியில் படித்தார் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 


டாக்டர் மன்மோகன் சிங் கல்லூரி வாழ்க்கை


டாக்டர் மன்மோகன் சிங் பஞ்சாப் யூனிவர்சிட்டியில் பிஏ, எம்ஏ என இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெறுகிறார். அதன்பிறகு 1957 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பொருளாதார மேல்படிப்பை முடிக்கிறார். அதன் பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்புக்கிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பின்னர் தனது பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (DPhil) பெற மீண்டும்  ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் சேர்ந்து படிப்பை தொடர்கிறார். 


டாக்டர் மன்மோகன் சிங் வசித்த பதவிகள்


அதன்பிறகு இந்தியா வருகிறார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் வேலை பார்க்கிறார். இந்தியாவின் பிரபல பொருளாதாரம் சார்ந்த கல்வி நிறுவனமான டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பேராசிரியராகா பாடம் நடத்தி உள்ளார். படிபடியாக முன்னேறி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியமான எகனாமிக் அட்வைசராக செயல்பட்டார். இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகாவும்,  இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞராகவும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குநராகவும், நிதி அமைச்சகத்தின் செயலாளராகவும், பிரதமரின் நேரடி ஆலோசகராகவும், யூஜிசி கமிஷனுடைய தலைவராகவும், இந்திய நாடாளுமன்ற மேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் என முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்து பல படிகளை கடந்தது இந்தியாவின் பிரதமர் என்ற உயரத்தை அடைந்தார்.


சர்வதேச அரங்கில் அங்கீகாரம்


மன்மோகன் சிங் அவர்கள் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக அவர் சர்வதேச அரங்கில் ஒரு முக்கியமான தலைவராக பார்க்கப்பட்டார். கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் ஆகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக மன்மோகன் சிங் திகழ்ந்தார் என சொல்வதில் அது மிகையாகாது. ஏனென்றால் அப்படிப்பட்ட பங்களிப்பை இந்தியாவின் முன்னேற்றத்துக்காக செய்துள்ளார். 


டாக்டர் மன்மோகன் சிங் பெற்ற முக்கிய விருதுகள்


இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கு மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாராட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1987-ல் பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு வழங்கியது. அதுமட்டுமில்லாமல் சிறந்த நிதி அமைச்சருக்கான ஏசியா மணி விருது (Asia Money Award for Finance Minister of the Year) விருதை இரண்டு முறை வாங்கி இருக்கிறார். மேலும் 1993 ஆம் ஆண்டு சிறந்த நிதி அமைச்சருக்கான யூரோ மணி (Euro Money Award for Finance Minister of the Year) விருதை மன்மோகன் சிங் பெற்றார்.


நிதி அமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங்


அவர் சிறந்த பொருளாதார நிபுணராகவும் அறிஞராகவும் காட்டிய சம்பவம் எதுவென்றால், 1991-ல் நடந்த லிபரலைசேஷன். அதாவது தாராளமயமாதல் இந்தியா ஒரு சோசியலிச எக்கனாமிக்கில் இருந்து ஒரு கேப்பிடலிசம் எகானாமிக்கை நோக்கி மாறிய தருணம். 1991 ஆம் ஆண்டு காலகட்டம்  இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. அதாவது இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலையை போல, ஒரு கடுமையான நிதிச்சுமையில் இந்தியா இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் தான் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்படுகிறார்.


டாக்டர் மன்மோகன் சிங்கின் தாராளமயக் கொள்கை


இன்னைக்கு இந்தியா பயணித்துக்கொண்டு இருக்கிற தாராளமயம் பாதைக்கு அடித்தளம் போட்டவர் டாக்டர் மன்மோகன் சிங் தான். அவருடைய இந்த தாராளமயக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்போது, "உலகத்துக்கு சத்தமாக கேட்கட்டும் இந்தியா இப்போது விழித்துக் கொண்டது" எனக்கூறி இந்த தாராளமயக் கொள்கையை அமல்படுத்தினார். பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதும், தாராளமயக் கொள்கை விஷயத்தை சிறப்பாக கையாண்டு, ஆமை போல ஊர்ந்து சென்றுக்கொண்டு இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது தாராளமயக் கொள்கைக்கு பிறகு அசுர வேகத்தில் வளர ஆரம்பிச்சது. இன்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் என்பதை மறக்கவே முடியாது. 


டாக்டர் மன்மோகன் சிங் கொண்டு வந்த முக்கியத் திட்டங்கள்


2004 லிருந்து 2014 வரைக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், பல முக்கியத் திட்டங்களை கொண்டு வந்தார். அதுக்குறித்து பார்ப்போம். 


தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005


ஆர்டிஐ என்பது ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட் (Right to Information Act, 2005). அதாவது ஒரு சாமானிய குடிமகனுக்கு கூட அரசாங்கத்தை தட்டிக் கேட்கிற உரிமை கொடுத்தது. இந்த ஆர்டிஐ இன்ஃபர்மேஷன் மூலமாக, எந்த துறையாக இருந்தாலும், அதுக்குறித்த தகவலை அரசாங்கத்திட்ட கேட்கலாம். அரசாங்கம் நிச்சயம் வந்து பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற ஒரு முக்கியமான சட்டத்தை மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் கொண்டு வந்த பிறகு, ஜனநாயக ரீதியாக நடந்த பல்வேறு போராட்டங்களுக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. 


நூறு நாள் வேலை திட்டம்


இரண்டாவது மிக முக்கிய திட்டம் என்றால், அது 100 நாள் வேலை திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme). கடுமையாக பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு, 100 நாள் வேலை திட்டத்தை டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்ச ஆதாரமாக 100 நாட்களுக்கு வேலை நிச்சயம் என்ற வாக்குறுதி அளித்தது. இந்த திட்டம் மூலம் விவசாயிகள் தற்கொலை குறைந்தது. பணப்புழக்கம் அதிகரித்தது. இதன் மூலமாக பொருளாதாரம் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டது. 


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009


அடுத்த முக்கியமான சட்டம் ஆர்டி அதாவது, ரைட் டு ஃப்ரீ அண்ட் கம்பல்சரி எஜுகேஷன் ஆக்ட் (Right of Children to Free and Compulsory Education Act, 2009). ஆறு முதல் 14 வயது வரை உள்ள இந்திய மாணவர்களுக்கு கட்டாயம் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம், கல்வி என்பது எல்லா மாணவர்களுடைய எல்லா மக்களுடைய அடிப்படை உரிமையாக மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தான் மாற்றப்பட்டது. இந்த திட்டம் வந்த பிறகு இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிகள் மூலம் கல்வி அளிக்கப்பட்டது. 


10 ஆண்டு காலம் பிரதமர்


2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரைக்கும் அந்த 10 ஆண்டு காலம் அவர் இந்திய பிரதமராக பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு பயனுள்ள, நாட்டின் பொருளாதாரா வளர்ச்சிக்கு தேவையான பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.


மேலும் படிக்க - மன்மோகன் சிங் பற்றி இதுவரை அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்..!


மேலும் படிக்க - இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார்!


மேலும் படிக்க - பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ