மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? ஏக்நாத் ஷிண்டே vs தேவேந்திர ஃபட்னாவிஸ்
Maharashtra Election Results 2024 Latest Updates: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பாஜக தலைமையிலான மஹாயுதி ஆட்சி அமைகிறது. அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே-ஆ? அல்லது தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Who Next Chief Minister In Maharashtra: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: பாரதிய ஜனதா கட்சி (BJP) 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
பாஜக தலைமையிலான மஹாயுதி முன்னிலை
காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக 122 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 62 இடங்களிலும், என்சிபி (அஜித் பவார்) 34 இடங்களிலும் முன்னணியில் இருந்தன. மஹா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி கட்சியான காங்கிரஸ் 20 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 18 இடங்களிலும், என்சிபி (எஸ்பி) 14 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன.
மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக தலைமையிலான மஹாயுதி 220 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பிரவின் தரேகர் சொன்ன ரகசியம்
மகாராஷ்டிரா பாஜக தலைவர் பிரவின் தரேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக வருவாரா என்ற கேள்விக்கு, மகாயுதியில் இருந்து ஒருவர் முதல்வராக இருப்பார் எனக் கூறியுள்ளார். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் மகாராஷ்டிரா மேலும் முன்னேறும் என்றும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் பாஜக தலைவர் தரேகர்.
பாஜகவை சேர்ந்தவர் தான் முதல்வராக வாய்ப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைபற்றி பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால், பாஜகவின் முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா
ஏக்நாத் ஷிண்டேவின் பின்னால் மக்கள் நின்றதால், உண்மையான சிவசேனா யார் என்பதை மக்கள் காட்டியுள்ளனர் என்று ஷிண்டே ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு ஆதரவு
பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக ஆக்குவதில் எந்த தவறும் இல்லை என்று பாஜக தலைவர் கேசவ் உபாத்யாய் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும்
முதல்வர் பதவி குறித்த பாஜக தலைவரின் கருத்துக்கு பதிலளித்த சிவசேனா தலைவர் ஷீத்தல் மத்ரே, சட்டமன்றத் தேர்தல் யாருடைய தலைமையில் நடத்தப்பட்டதோ, அவர்தான் மாநிலத்தின் முதல்வராக இருக்க வேண்டும். எனவே ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறிய அவர், எவ்வாறாயினும், இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று அவர் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே முன்னிலை
ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வில், மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக 31 சதவீத விருப்பத்துடன் முதலிடத்தில் இருப்பதாகக் காட்டியது. அதேபோல முன்னாள் முதல்வரும், சிவசேனா UBT தலைவருமான உத்தவ் தாக்கரே 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், 12 சதவீத மக்கள் ஃபட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் படிக்க - Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை
மேலும் படிக்க - கேரளா வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் 2024: பிரியங்கா காந்தி முன்னிலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ