Election Results 2024: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இந்தியா கூட்டணிக்கும் இடையேயான தீவிர தேர்தல் போர் உச்சத்தை அடைந்துள்ளது. தபால் வாக்குகளின் எண்ணிக்கையுடன் காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்று முடிவுகளில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளதை பார்க்க முடிகின்றது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இரு மாநிலங்களிலும் ஒரு அணியாகப் போட்டியிடும் NDA மகாராஷ்டிராவைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஜார்க்கண்டில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இவை அனைத்தும் கணிப்புகளே. உண்மையான நிலவரம் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: மகாயுதி vs மகா விகாஸ் அகாடி (MVA)
மகாராஷ்டிராவில், சிவசேனா மற்றும் என்சிபி (அஜித் பவார்) அடங்கிய பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கும், சிவசேனா (யுபிடி), என்சிபி (எஸ்சிபி) உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணிக்கும் இடையே முதன்மைப் போட்டி நிலவுகிறது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் மஹாயுதி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளனர். இருப்பினும், மஹா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) மஹாயுதி கூட்டணிக்கு பெரும் போட்டியை அளிக்கும் என்றே தோன்றுகிறது. போட்டி பலமாக இருந்தாலும், மஹா விகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மையை அடைய வாய்ப்பில்லை என்றும் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
முன்னதாக, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, 'மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை பெற்றால் யார் முதல்வர் என்பதை மகாயுதியின் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்வார்கள்.' என கூறினார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024, மாநிலத்தின் அரசியல் கணத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும். ஏனெனில் இது முக்கிய கட்சிகளான சிவசேனா மற்றும் என்சிபி ஆகியவற்றில் ஏற்பட்ட பிளவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: NDA vs INDIA
ஜார்க்கண்டில், தங்கள் பணிகள் மற்றும் வாக்குறுதிகளை நம்பி போட்டியிடும் ஆளும் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணிக்கும், மத்திய அரசின் வாக்குறுதிகள் மற்றும் பணிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.
ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (AJSU), ஜனதா தளம் (ஐக்கிய), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகியவை உள்ளன. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகியவை உள்ளன.
ஜார்கண்டில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டன. எனினும், JMM -ஐக் காட்டிலும் பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சில கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ