அந்த வகையில், இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் அமித் மால்வியா, இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதிகள் மீதான நேபாளத்தின் உரிமைகோரலை தீவிரமாக ஆதரிக்கும் நேபாள தூதரின் மகளான சும்னிமா உதாஸின் திருமண நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார் எனவும் இவர்களுடன் ராகுல்காந்திக்கு என்ன தொடர்பு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல, ராகுலின் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, "ராகுல் காந்தி முழுநேர சுற்றுலா பயணியாகவும், பகுதிநேர அரசியல்வாதியாகவும் திகழ்வதாக குறிப்பிட்டார். அவருடை பயணமும், கொண்டாட்டமும் முடிந்து நேரம் கிடைக்கும்போது இந்திய மக்களை அரசியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார் எனவும் விமர்சித்துள்ளார். இதேபோன்ற பாஜகவின் தலைவர்கள் பலரும் ராகுல்காந்தியின் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து தங்களுடைய கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். 


மேலும் படிக்க | இளம்பெண்ணுடன் மது பாட்டிலோடு நைட் கிளப்பில் அமர்ந்திருந்த ‘ராகுல்காந்தி.!’


பாஜகவினரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, "பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அழையாவிருந்தாளியாக பங்கேற்றது அனைவரும் அறிந்ததே என தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி அப்படி கிடையாது என குறிப்பிட்ட ரந்தீப் சுர்ஜிவாலா, நண்பரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற திருமண விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றதில் என்ன தவறு உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 


ரந்தீப் சுர்ஜிவாலாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்க், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் மற்றும் இணையத்தில் இந்த செய்தியை பார்த்த நபர்கள் என பலரும் ராகுல்காந்திக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தனது நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பது அவரின் உரிமை எனவும் இதை வைத்து பாஜகவினர் அரசியல் செய்வது மிகவும் தவறான செயல் எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அரசியல் கட்சி தொடங்கும் பிரசாந்த் கிஷோர்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G