விவசாயிகள் தற்கொலை ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் மற்றும் நீதிபதி என்.வி ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விவசாயிகளின் தற்கொலை உணர்வுபூர்மானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசு கொள்கை வகுக்காதது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.