பாதுகாப்பு நெறிமுறைகளை ராகுல் பின்பற்றவில்லை -ராஜ்நாத்
பாதுகாப்பு இல்லாமல் எதை மறைக்க ராகுல் காந்தி வெளிநாடு சென்று முயற்சி செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
இன்று லோக்சபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் வீச்சு சம்பவம் குறித்து எதிரொலித்தது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசும்போது, ஒரு கல் பட்டிருந்தாலும், ராகுல் உயிர் இழந்திருப்பார் என குற்றம்சாட்டினர்.
இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் பயணித்தின்போது, குண்டு துளைக்காத காரில் செல்லாமல், சாதாரண காரில் சென்ற ராகுல்காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தி 72 நாட்கள் எஸ்பிஜி பாதுகாப்பை புறக்கணித்து 6 முறை வெளிநாடு சென்றிருக்கார். இதன் மூலம் தனக்கு தானே அச்சுறுத்தலை உருவாக்கி கொண்டார்.
இந்த நாடும், பாதுகாப்பை புறக்கணித்து வெளிநாடு செல்வதன் மூலம் எதை மறைக்க முயற்சி செய்கிறர் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.