ஹைதராபாத்: கணவன் தைத்துக்கொடுத்த ஜாக்கெட் பிடிக்காமல் போனதால் தம்பதியருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  'வீட்டிற்கு வீடு வாசற்படி' என்கிற பழமொழி போல் குடும்பத்தில் கணவன்-மனைவி இடையேயான சண்டை என்பது வழக்கமான ஒரு நிகழ்வு தான்.  அதனை சிலர் சாதாரணமாகவும், சிலர் பெரிய விவகாரமாகவும் எடுத்து விடுகின்றனர்.  கணவன்-மனைவி இடையேயான சிறிய பிரச்சனை தற்கொலை  செய்யும் அளவிற்கு கூட பெரிதாகிவிடுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மனைவி கறந்தால் மட்டுமே மாடு பால் தருகிறது - போலீசில் புகார் அளித்த கணவன்!


ஹைதராபாதில் உள்ள அம்பர்பேட்டையில் உள்ள கோலனகா திருமலா  ஸ்ரீனிவாஸ்- விஜயலக்ஷ்மி தம்பதியினர்  வசித்து  வருகின்றனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.  ஸ்ரீனிவாஸ் தையல் தைப்பது, புடவை போன்ற துணிகளை வீடு வீடாக சென்று விற்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.  சமீபத்தில் இவர் மனைவிக்கு ஒரு ஜாக்கெட் தைத்து கொடுத்துள்ளார்.  அவர் மனைவி அந்த ஜாக்கெட்டின் தையல் எனக்கு பிடிக்கவில்லை  இதை ஆல்டர் செய்து தாருங்கள் என்று கூறினார்.  அதற்கு ஸ்ரீனிவாஸ் மறுப்பு தெரிவித்தார், இதனை தொடர்ந்து இருவருக்கும் விவாதம் முற்றியது.  உடனே அவர் இந்த தையலை நீயே சரிசெய்து உனக்கு பிடித்தது போல் தைத்துக்கொள் என்று கோவமாக கூறிவிட்டார்.  இதனால் மனவேதனை அடைந்த விஜயலக்ஷ்மி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு கொண்டார்.


இதனையடுத்து மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய  ஸ்ரீனிவாஸ்- விஜயலக்ஷ்மி தம்பதியினரின் குழந்தைகள் தன் தாயை தேடிய நிலையில், மூடியிருந்த படுக்கயறையின் கதவை மீண்டும் மீண்டும் தட்டினர்.  அறையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை, இதுகுறித்து குழந்தைகள் அக்கம்பக்கத்தினரிடம் கூற, அவர்களும் அறையை திறக்க முயற்சி செய்துவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.  அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.  மேலும் இது கொலையா? தற்கொலையா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ கணவன்-மனைவி பிரச்சனையால் 5 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR