தேர்தல் முடிவுக்கு முன்னரே முதல்வர் ஆன காங்கிரஸ் தலைவர்...
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாவதற்கு முன்னரே, அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் பெயர் முதல்வர் என விக்கிப்பிடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது!
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாவதற்கு முன்னரே, அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் பெயர் முதல்வர் என விக்கிப்பிடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது!
199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகின்றது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது, எனினும் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகாத நிலையில் முதல்வர் குறித்து அமைதி காத்து வருகிறது காங்கிரஸ்.
இதற்கிடையில் விக்கிப்பிடியாவில் காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலடின் பெயர் ராஜஸ்தான் முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 13-ஆம் நாள் முதல் அவர் பதவி வகித்து வருபது போலவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் விமர்சகர்களுக்கு தீனியாய் மாறியுள்ளது.
ராஜஸ்தான் தேர்தலை பொறுத்தமட்டில் முக்கிய வேட்பாளர்களான சச்சின் பைலட் முன்னாள் முதல்வர் அசோக் கெலட் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் மாநில முதல்வர் குறித்து கட்சி தலைமையிடமே முடிவெடுக்கும் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுமுனையில் பாஜக முக்கிய வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே கனிசமான வாக்கு எண்ணிக்கையுடன் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய நிலவரம் வரை எந்த கட்சி ஆட்சி அமைக்கும், யார் முதல்வர் பதவியேற்பர் என்ற தகவல் கேள்விகுறியாகவே உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் பெயர் முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.