கேரளா மாநிலம் மூணாறு  நயமங்காடு தேயிலை தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகள் தங்கள் இருப்பிடங்களை விட்டு, மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுவதால், மக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். யானைகளின் நடமாட்டம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், தற்போது மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் வருவது தொந்தரவுகளை மேலும் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் , நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் நயமங்காட்டில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தலைமை ஆசிரியை மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்த காட்டுயானைகள் முன்னால் இருந்த தகர கேட்டை அடித்து உடைத்துள்ளன. பின்னர் வீட்டு சுவர்களையும் இவை தாக்கியுள்ளன. இதனால் கட்டிடத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 



மேலும் படிக்க | உயர்ந்தது பால் விலை! ஆவின் புதிய விலை உயர்வு பட்டியல் இதோ! 


இந்த இடிபாடுகளின் சத்தம் கேட்டு எழுந்த ஆசிரியை மற்றும் அவரது கணவர் சாலமன் ராஜா ஆகியோர் காட்டு யானைகளை கண்டு அச்சம் கொண்டனர். செய்வதறியாமல் தவித்த அவர்கள் பின்னர், பின்புறம் உள்ள கதவு வழியாக வெளியே சென்று, அருகிலுள்ள பள்ளி கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.