சாலையின் நடுவே குட்டியை ஈன்ற யானை - அமைதியாக 1 மணி நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகளின் நெகிழ்ச்சி செயல்

கேரள மாநிலம் மறையூர் அருகே சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று குட்டியை  ஈன்றபோது வாகன ஓட்டிகள் பொருமை காத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Jul 6, 2022, 08:17 PM IST
  • சாலையிலேயே குட்டியை ஈன்ற யானை
  • ஒரு மணி நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள்
  • தாய் யானை மற்றும் குட்டியின் வீடியோ வைரல்
சாலையின் நடுவே குட்டியை ஈன்ற யானை - அமைதியாக 1 மணி நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகளின் நெகிழ்ச்சி செயல் title=

இன்றைய அவசரமான வாழ்கை முறையில் மனிதர்கள் நேரத்தை வீனடிக்கவோ அல்லது அதை பிறருக்காக செலவழிக்கவோ விரும்புவது இல்லை. அந்த சூழலில் சில நேரங்களில் மனிதாபிமானம் என்ற ஒன்றும் அவர்களிடம் இருந்து மறைய தொடங்கிவிடுகிறது. ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் சில சம்பவங்கள் மனிதாபிமானம் என்ற ஒன்று மனிதர்கள் மத்தியில் இன்றும் உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 

அப்படி ஒரு சம்பவம்தான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் சாலையில் நடந்துள்ளது. கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஹாரன்களை எழுப்பாமல் பேரமைதி நிலவுகிறது. அவர்களுக்கு பின்னால் காத்திருப்பவர்கள் ஏதோ அரசியல் தலைவரின் வாகனம் கடந்து செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதோ என நினைத்திருக்கலாம்.

Elephant

இருப்பினும் ஹாரன் சத்தம் கூட இல்லாமல் எப்படி இவ்வளவு அமைதி நிலவுகிறது என வாகனங்களை விட்டு இறங்கி சென்று பார்த்தவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே குட்டியை பிரசவிக்க முயன்றது தான் அது. 

மேலும் படிக்க: என்ன அடிச்சிட்டு நீ அழுகுறியே...குழந்தையை பார்த்து குழம்பிய பூனை!

 

வாகனங்களின் ஒளி விளக்கிற்கு நடுவே கருமை நிறத்தில் மிகப்பெரிய உருவம் கொண்ட அந்த பெண் யானை பிரசவவலி தாங்காமல் அல்லாடியது. இதைப் பார்த்து பயந்துபோன வாகன ஓட்டிகள் முதலில் அச்சத்தினால் வாகனங்களை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார்கள். இதேபோல் அவர்களுக்கு பின்னால் வந்தவர்களும் வாகனங்களை நிறுத்திவிட்டு பொறுமை காத்தனர். 

சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஓர் அழகான குட்டி யானை இந்த பூமியை தொட்டது. சாலையின் நடுவே பிறந்த குட்டிக்கும், தாய்க்கும் காவலாளிகளாக மாறியிருந்த வாகன ஓட்டிகள், மெல்ல தத்தி தத்தி எழுந்து தனது முதல் அடியினை எடுத்து வைக்க குட்டி யானையின் அழகில் மயங்கினர். இறுதியில் தாயும் சேயும் கொஞ்சலுடனும், அன்பு கலந்த வருடலுடனுடம் தங்களின் இல்லமான காட்டை நோக்கி நடந்து சென்றன. 

நகரங்களில் ட்ராபிக் சிகனலில் 1 நிமிடம் காத்திருக்க பொறுமை இல்லாத மனிதர்கள் அத்துவான காட்டில் நள்ளிரவில் சுமார் 1 மணி நேரம் எந்த பரபரப்பும் இன்றி பொருமையுடன் காத்திருந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். வாகன ஓட்டிகளின் இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க: என்ன அடிச்சிட்டு நீ அழுகுறியே...குழந்தையை பார்த்து குழம்பிய பூனை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News