விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி, கொடுத்தது. இதை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. 


பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்திய அபிநந்தனின் மிக் 21 ரக விமானத்தை மற்றொரு எப்-16 ரக விமானத்தின் அம்ரான் ரக ஏவுகணை தாக்கியது. அதைத்தொடர்ந்து, போர் விமானத்தில் இருந்து எஜக்ட் ஆன அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார். கிட்டத்தட்ட 50 மணி நேரம் பாகிஸ்தானில் இருந்த அபிநந்தனை மார்ச் 1 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைத்தனர். 


இதை தொடர்ந்து, விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஆம்ரான் ஏவுகணையை சுமக்கக் கூடிய வல்லமை மிக்கது எப்.16 விமானம் மட்டும்தான். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக அமெரிக்காவால் அளிக்கப்பட்ட இந்த விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திய பாகிஸ்தான் கடும் சர்வதேச நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது.


அபிநந்தனால் வீழ்த்தப்பட்டது எப்.16 விமானம் அல்ல என பாகிஸ்தான் மழுப்பி வரும் நிலையில், அபிநந்தன் வீழ்த்தியதை நேரில் பார்த்த சாட்சிகளுடன் மின்னணு சாட்சியங்களும் இருப்பதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறியுள்ளார்.