ஜெய்ப்பூர்: ராஜஷ்தானில் தன் தாயாருடன் சமரசமாக செல்லாததால், தன் இரு மனைவிகளையும் தீவைத்து கொன்ற ஜெய்பூர் கணவர் அணைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தீபா ராம் என்பர், நேற்ற முன்தினம் தனது இரு மனைவிகள் தாரியா தேவி(25) மற்றும் மாலி தேவி(27) இருவரையும் தன் காரினுல் வைத்து தீவைத்து கொன்றுள்ளார். இச்சம்பவத்திற்கு முன்னதாக இரு மனைவியருக்கும் நகை வாங்கித்தருவதாக கூறி காரில் அழைத்து சென்று இவ்வாறு செய்துள்ளார்.


குடும்ப விவகாரங்களில் சமரசம் கொள்ளாமல், தொடர்ந்து பிரச்சனைகளை செய்து வந்ததால், நிம்மதி இழந்து இறுதியாக இந்த முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.


"எனினும் இச்சம்பவத்தின் போது இருவரில் ஒரு மனைவி தப்பிக்க முயன்ற வெளியேற முயற்சித்தார், ஆனால் அவரை தப்பிக்கவிடாமல் மீண்டும் உள்ளே தீயினுள் தள்ளி விட்டேன்" என விசாரணையில் அவர் தெரிவித்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


குற்றம்சாட்டப்பட்ட ராம் குஜராத்தில் கூலிதொழிலாலியாக பணிபுரிந்து வருகின்றார், எனவும் இச்சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.