புதுடெல்லி: இன்றைய முக்கியச் செய்திகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த சில செய்திகள் இவை, இந்தியா, உலகம் என பல செய்திகள் முக்கியமானவை.... அவற்றில் சில... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. கோவிட் -19 தடுப்பூசி: ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை, தடுப்பூசி  அட்டவணையில் இணைக்கும் சோதனை முயற்சிகளை பிரிட்டன் தொடங்கியது. 


2. ரஷ்யாவுடன் புதிய START அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது அமெரிக்கா.


3. மியான்மர் போலீசார், ஆங் சான் சூகி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.


4. மியான்மரில் பேஸ்புக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது அந்நாட்டு ராணுவம் 


5. சீனா முழுவதிலும் உள்ள 200 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் படித்து வரும் பிற நாடுகளை மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் திரும்புவதற்கான தெளிவான தேதியை அறிவிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Also Read | இதில் உங்கள் பெயர் இல்லை என்றால், தடுப்பூசி கிடையாது: தமிழக அரசு
 
6. 10 மில்லியன் டோஸ் COVAX தடுப்பூசியை கொடையாக வழங்கும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது


7. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.


8. மகாராஷ்டிராவின் முன்னாள் விளையாட்டு அமைச்சர் ஆஷிஷ் ஷெலரை தேர்தலில் தோற்கடித்த அஜய் சிங், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (Boxing Federation of India (BFI)) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


9. தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு 322 ரூபாய் குறைந்து 47,135 ரூபாயாக குறைந்துவிட்டது; வெள்ளி கிலோ ஒன்றுக்கு 972 ரூபாய் சரிந்து, 67,170 ரூபாய்க்கு விற்கிறது. 


10. பங்குச் சந்தைகளில், தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வு காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை BSE 359 புள்ளிகள் உயர்ந்து 50,614 என்ற உயர் சாதனையை எட்டியுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டு விலை103 புள்ளிகள் அல்லது 0.7 சதவீதம் முன்னேறி, 14,896 என்ற புள்ளிகளை எட்டியது.  


Also Read | Farmers Protest: அமெரிக்காவின் கருத்து சிலருக்கு இடியாய் விழுந்தது!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR