புதுடில்லி: ஒருபுறம், விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில், சர்வதேச அளவில் இந்தியாவை இழிவுபடுத்தும் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அமெரிக்கா இந்த விவகாரத்தில் முதன்முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளது. வேளாண் துறையை சீர்திருத்த இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஜோ பைடன் நிர்வாகம் பாராட்டியுள்ளது.
அதே நேரத்தில், விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டுவரவும் அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்காவின் கருத்து என்ன?
அமெரிக்க (America) வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் வரவேற்கப்பட வேண்டும். தனியார் துறையின் பங்கை இதில் அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பாக, அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால், இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.” என்றார்.
இணைய சேவை மீட்கப்பட வேண்டும்
ஜனவரை 26, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த போராட்டத்திற்குப் பிறகு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, வதந்திகள் பரவாமல் இருக்க, டிக்ரி, சிங்கு மற்றும் காசிபூர் எல்லைப் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.
இது தவிர, ஹரியானாவின் (Haryana) சில மாவட்டங்களிலும் இணைய சேவை பாதிக்கப்பட்டது. இது குறித்து கூறிய அமெரிக்கா இணைய சேவைகளை மீட்கவேண்டும் என்றது. எந்தவொரு தகவலும் மக்களை சென்றடைவதில் இணையம் மிகவுக் உதவியாக இருக்கிறது. இது நல்ல ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் என்று அமெரிக்கா கூறியது.
ALSO READ: விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட் ... கங்கனாவிற்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு..!!
சதித்திட்டத்திற்கு சான்று
புதிய வேளான் சட்டங்களுக்கு (Farm Laws) எதிரான விவசாயிகளின் எதிர்ப்பு என்ற போர்வையில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடத்தப்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை ஒரு சாக்காக கொண்டு நாட்டை இழிவுபடுத்தும் சர்வதேச பிரச்சாரம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பாப் நட்சத்திரம் ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், மியா காலிஃபா ஆகியோரின் ட்வீட் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அமெரிக்க பாப் நட்சத்திரமான ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், மியா கலீஃபா போன்றவர்களுக்கு விவசாயிகள் போராட்டத்துடன் என்ன தொடர்பு என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தியாவுக்குப் பிறகு, அமெரிக்காவின் பதில் அத்தகைய நபர்களின் முகத்தில் ஒரு அடியாக விழுந்துள்ளது.
இந்தியாவின் கடுமையான எச்சரிக்கை
அவதூறு செய்வதற்கான சதி குறித்து இந்தியா எச்சரித்துள்ளது. பாப் ஸ்டார் ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் போன்ற பிரபலங்களுக்கு, சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்ற ஒரு தெளிவான மற்றும் வலுவான பதிலை இந்தியா அளித்தது.
மறுபுறம், ட்விட்டர் கணக்கை பிளாக் செய்யும் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு ட்விட்டருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரவைப் பின்பற்றாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்பட்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.