Chennai: பிப்ரவரி 5 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடை பெறவிருக்கிறது. முதல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளன. டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே இந்தியா (England tour of India 2021) வந்துவிட்டது.
முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளதால், இரண்டு அணிகளும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். நாளை மறுநாள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டி (India vs England, 1st Test) தொடங்கவுள்ளது. இதனால் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), சென்னை மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நாட்டுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் 50% இருக்கைகளை நிரப்பிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விளையாடப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், சேபாக்கம் மைதனாத்தில் (MA Chidambaram Stadium, Chennai) இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடப்பட்ட மொத்தம் 32 போட்டிகளில் 14 டெஸ்ட்களை இந்தியா வென்றுள்ளது. 11 போட்டிகளில் டிரா செய்துள்ள இந்திய அணி, 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.
ALSO READ | IND vs Eng: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி சாதனைப் படைத்தது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR