உ.பி முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் யோகிஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுஇட்ந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள், மூத்த பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் படிக்க | மேகதாது: தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து கர்நாடகா சட்டமன்றத்தில் தீர்மானம்
சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரே நபர் முதல்வராக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவிற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் 60 தொழில் அதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். யோகா குரு ராம்தேவ், "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் நடிகர் அனுபம் கெர் ஆகியோரும் விருந்தினர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பாதுகாப்பு பணிகளுக்காக இந்நிகழ்ச்சியில் சுமார் 8,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க | மனைவியுடன் ‘கட்டாய உடல் உறவு’ பாலியல் வன்கொடுமை தான்: கர்நாடக உயர்நீதி மன்றம்
முதல்வர் யோகிக்கு பிறகு, 2 துணை முதல்வர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த முறை கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR