மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அது தமிழர் நலனுக்கு எதிரானது என அணை கட்டுவதற்கு, தமிழக ஆரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அன்று முதல் இன்று வரை மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியது.
மேலும், அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து உள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மேகதாது அணை விவகாரத்தில், தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ள தோடு, மேகதாது விவகாரத்தில், கர்நாடகாவின் தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி அனைவரும் ஒரே அணியாக உள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது பிரச்சனை தமிழ்நாடு - கர்நாடகம் இடையேயான உணர்வுப்பூர்வமான பிரச்சனை எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், இந்த தீர்மானத்தை முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றித் தந்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், தமிழ்நாட்டு உரிமையில் நாம் ஒன்றுபட்டு நின்று வெற்றி பெறுவோம் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்
மேலும் படிக்க | மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முடிவு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR