மனைவியுடன் ‘கட்டாய உடல் உறவு’ பாலியல் வன்கொடுமை தான்: கர்நாடக உயர்நீதி மன்றம்

இந்தியாவில் மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனது கணவர் மீது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள சிறப்பு சலுகை மூலம் தண்டனைகள் எதுவும் கிடைப்பதில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2022, 01:08 PM IST
  • பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு.
  • மனைவியை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்வது குற்றம்.
  • கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு
மனைவியுடன் ‘கட்டாய உடல் உறவு’ பாலியல் வன்கொடுமை தான்: கர்நாடக உயர்நீதி மன்றம் title=

இந்தியாவில் மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனது கணவர் மீது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள சிறப்பு சலுகை மூலம் தண்டனைகள் எதுவும் கிடைப்பதில்லை. 

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375-ல் ஆண் தனது மனைவியுடன் கட்டாய உடல் உறவில் ஈடுபட்டாலும் அந்த பெண்ணின் வயது 15-க்கு மேல் இருந்தால் அது பாலியல் வன் கொடுமையாக கருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவில் உள்ள சிறப்பு சலுகையால் மனைவியை கணவன் கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தாலும் இது குற்றமாக கருத்தப்படுவதில்லை. 

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும் படியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..!!

கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. 

அதே நேரத்தில், கணவன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து செய்யப்படவில்லை என்றாலும், இது மனைவியை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்வது குற்றம் என்ற கோணத்தில் பார்க்கப்படவில்லை என்றது. 

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி நாகபிரசன்னா, ஆண் ஆண் தான், சட்டம் சட்டம் தான், பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான். கணவனாக ஆண், மனைவியான பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அது பாலியல் வன்கொடுமை தான். 

பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால், அது எந்த ஆணாக இருந்தாலும் தண்டனை உண்டு தான். அந்த ஆண் கணவனாக இருந்தாலும் சரி என்றார். பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ உரிமமோ திருமண அமைப்பு வழங்காது வழங்கவில்லை, வழங்கவும் கூடாது என்றார்.

மேலும் படிக்க | ‘ஹிஜாப் ’ தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News