COVID-19 News: ஆகஸ்ட் 5 முதல், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்களை  (Yoga Institutes) திறக்க அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலைத் தடுக்க, ஜிம் மற்றும் யோகா மையங்களை மத்திய அரசு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மூடியது. "உடல் செயல்பாடு மற்றும் யோகா ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்பதால், நாடு முழுவதும் அன்லாக் (Unlock 3) மூன்றாம் கட்டத்தின் போது உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதிதுள்ளது. COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக தொலைதூர விதிமுறைகளை கடைபிடிக்க ஒரு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டுப்பாட்டு மண்டலங்களில் (Containment Zones ) உள்ள யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் (Gymnasiums) இந்த மாத இறுதி வரை மூடப்பட்டிருக்கும். "கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உள்ளவை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது" என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ | கொரோனா காலத்தில் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?...


புதிய வழிகாட்டுதல்கள்: 


1) 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஜிம் அல்லது யோகா மையங்களில் நிழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


2) தனிநபர்கள் குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை முடிந்தவரை பராமரிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிட்டுள்ளன.


3) நீங்கள் வளாகத்தில் இருக்கும்போது முகமூடி அவசியம். "இருப்பினும், யோகா உடற்பயிற்சியின் போது அல்லது உடற்பயிற்சிக் கூடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது, ​​முகமூடியை மூக்குக்கு கீழே பயன்படுத்தப்படலாம்" என்று கூறப்பட்டு உள்ளது. 


4) உடற்பயிற்சியின் போது முகமூடி அணிவது, குறிப்பாக N95 முகமூடிகள், சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், சற்று முகமூடியை மேலும், கீழும் சரிசெய்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.


ALSO READ | பெரியவர்களை விட 5 வயதுக்கு குறைவான குழந்தைகளை covid-19 அதிகம் பாதிக்கும்: ஆய்வு!


5) அடிக்கடி இடைவெளியில் கைகளை கழுவுவது நல்லது. சோப்பு அல்லது கிருமி நாசினி சார்ந்த சானிடிசர் பயன்படுத்தலாம்.


6) சுவாச ஆசாரம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஒரு திசு அல்லது கைக்குட்டை அல்லது நெகிழ்வான முழங்கையால் இருமல் அல்லது தும்மும்போது ஒருவர் வாய் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும்.


7) அனைவரும் ஆரோக்யா சேது பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


8) எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.


ALSO READ |  எச்சரிக்கை.... இனி முகமூடி அணியாமல் வீட்டு வாசலுக்கு வந்தாலே அபராதம்!