குடியுரிமை திருத்தச் சட்ட குறித்து Zee Newsல் பொது விழிப்புணர்வு பிரச்சாரம்!!
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக Zee News பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக Zee News பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. ஜாமியா மற்றும் சீலாம்பூர்-ஜாஃபராபாத் வன்முறைகள் மற்றும் ஜாமா மஸ்ஜித் அருகே நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக வணிகர்கள் டெல்லிக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.
இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தரவரான மற்றும் வதந்திகளை பரவுவதை குறித்து Zee News பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த பிரச்சாரத்தில், Zee New மிஸ் கால் அழைப்பு மூலம் மக்களின் ஆதரவை நாடுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீங்கள் ஆதரித்தால், கட்டணமில்லா எண் 7836800500 என்ற எண்ணில் மிஸ் கால் கொடுத்து உங்கள் ஆதரவைப் பதிவுசெய்க.
சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.