புத்தாண்டு தினத்தன்று டெலிவரி பாயாக பணியாற்றிய Zomato CEO!
டிஜிட்டல் உலகில் கிட்டதட்ட எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் தான். பொருட்கள் மட்டுமல்லாது சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகளை பயன்படுத்தி உணவுகளுக்கான ஆர்டர்கள் செய்யப்படுகின்றன.
டிஜிட்டல் உலகில் கிட்டதட்ட எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் தான். பொருட்கள் மட்டுமல்லாது சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகளை பயன்படுத்தி உணவுகளுக்கான ஆர்டர்காள் செய்யப்படுகின்றன. வீட்டிலிருந்த படியே, உணவுகளை பெற ஏராளமானோர் தினமும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
டெலிவரி பாயாக பணியாற்றிய Zomato CEO
இந்நிலையில் Zomato இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன தீபிந்தர் கோயல் புத்தாண்டு தினத்தன்று, உணவு டெலிவரி பாயாக பணியாற்றினார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததை அடுத்து, ஆர்டர் டெலிவரி செய்பவர்கள் கடும் வேலை பளுவிற்கு ஆளாயினர். அவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டபோது தலைமை நிர்வாக அதிகாரி டெலிவரி பாயாக மாறி உதவி செய்ய களத்தில் இறங்கினார்.
மேலும் படிக்க | யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ!
ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்ட தகவல்
Zomato இணை நிறுவனரும் தலைவருமான தீபிந்தர் கோயல் புத்தாண்டு தினத்தன்று உணவு விநியோக தளத்தின் டெலிவரி பாய் ஆன நிலையில், அவருக்கு Zomato அலுவலகத்திலிருந்தே முதல் ஆர்டர் கிடைத்தது. அவர் சில மணி நேரத்தில் 4 டெலிவரியை வழங்கினார். இந்த தகவலை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவலை பகிர்ந்து கொண்டு, தனது சொந்த நிறுவனத்தில் இரண்டு ஆர்டர்களை டெலிவரி செய்யப் போவதாகக் கூறினார்.
பின்னர், மற்றொரு ட்வீட்டில், அவர் Zomato அலுவலகத்திலிருந்தே முதல் ஆர்டரைப் பெற்றதாகத் தெரிவித்தார். அவர் எழுதினார், "எனது முதல் டெலிவரி பணியின் நான் மீண்டும் Zomato அலுவலகத்திற்கே சென்றேன்."
நெட்டிசன்களின் பொழிந்த பாராட்டு மழை
தீபிந்தர் கோயலின் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர். ராதிகா குப்தா என்ற ஒரு பயனர் இது குறித்து பதிவிடுகையில், “தீபிந்தரை நிச்சயம் பராட்ட வேண்டும்! நிறுவனத்தின் மீதான ஈடுபாடு ஆர்வம் நம்ப முடியாத அளவில் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
சொமோட்டோ நிறுவனம் படைத்த சாதனை
புத்தாண்டு தினத்தன்று நிறுவனம் பெற்ற ஆர்டர்களின் அளவு, முந்தைய மூன்று புத்தாண்டு தினங்களில் நிறுவனம் பெற்ற ஆர்டர்களின் தொகைக்கு சமம் என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க | சாப்பிட ஏதாச்சும் கேட்டா ஆப்பிள் தராங்க..கடுப்பான நாகப்பாம்பு: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ