ஐ.பி.எல் 2018 டி-20 கிரிக்கெட் போட்டியின் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள 44_வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாவது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இதுவரை பத்து ஆட்டங்களில் ஆடி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி பத்து போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் முனைப்பில் உள்ளது. 


 



 


அதேவேளையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 11 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. 


 



 


இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன. பஞ்சாப் அணி ராஜஸ்தானிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் தோற்றது. இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஞ்சாப் அணி 8 வெற்றியும், கொல்கத்தா அணி 14 வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல இன்றைய போட்டி நடக்கவிருக்கும் இந்தூரில் மைதானத்தில் இரண்டு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.


 



 


இன்று மாலை நடைபெற உள்ள 44_வது லீக் ஆட்டத்தில் மோதும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு தமிழக வீரர்கள் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.