IPL _2018: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய பெங்களூரு!
IPL 2018 தொடரின் 45-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 45-வது போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பண்ட் 61 ரன்களை குவித்தனர். இன்று அறிமுக வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா(17 வயது) அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, பெங்களூரு அணியின் சார்பில் சகால் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், மொயீன் அலி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்தீவ் படேல், மொயின் அலி ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுக்க பெங்களூரு அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி-அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.
இறுதியில், 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி வெற்றி இலக்கை அடைந்தது.
மேலும், இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் அணியை புனேவில் எதிர்கொள்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வாகண்டே மைதானத்தில் பலபரீட்சையில் ஈடுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.