உண்மையான மனம் திரும்புதல் பற்றி இயேசு கிறிஸ்து கூறும் கருத்து பற்றி பார்போம்....!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பெரும் செல்வந்தருக்கு நிறைய விளைநிலங்கள் இருந்தன. அவர் தனது நிலத்தின் ஒரு பகுதியில் தானியங்களையும், இன்னொரு பகுதியில் திராட்சைத்தோட்டம் இருந்தது. அவரது நிலத்தில் தினமும் அநேகர் வந்து பணிபுரிவார்கள், அன்றும் அப்படிதான் அநேக பணியாளர்கள் வந்து காலை 9 மணி அளவில் வேலை செய்ய தொடங்கினர். 


அப்போது, அன்று வயலில் அறுவடை வேலையை முடிக்க வேண்டும் என முடிவுசெய்ததால், மீண்டும் 12 மணி அளவில் கூடுதலாக அதற்கேற்ப ஆட்களை வரச் சொன்னார். அப்போதும் அறுவடை முடியவில்லை. மதியம் 2 மணி, 3 மணி, 4 மணி என்று அவ்வப்போது போய் ஆட்களை அழைத்து வந்து வயலில் இறக்கினார். 


ஒரு வழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்தது. அப்போது எல்லோருக்கும் ஒரே  மாதிரியான கூலியை வழங்கினார். இது பலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலருக்கு வருத்தமாக இருந்தது. ஒருவர் இது பொறுக்கமுடியாமல் செல்வந்தரிடம் இது குறித்து வினாவினார்.


இவர்கள் இப்போதுதான் வேலையில் இணைந்தார்கள். நாங்கள் காலையில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்குக் கொடுப்பதைவிட, அவர்களுக்குக் குறைவாகக் கூலி தருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எல்லோருக்கும் ஒரேமாதிரி தருகிறீர்களே என்றார். 


அதற்கு அந்த செல்வந்தர் உங்களிடம் பேசிய கூலித்தொகையை நான் குறைத்திருக்கிறேனா நான் இரக்கமுள்ளவனாக இருப்பதில் உனக்கென்ன பிரச்னை என்றார்.


இந்தக் கதையின் மூலம் இயேசு கிறிஸ்து, அறிவுறுத்தப்படும் செய்தியாக, செல்வந்தராக ஆண்டவரையும், திராட்சைத் தோட்டத்தை விண்ணரசாகவும், நம்மை அவரது ஊழியக்காரராகவும் அறிவுறுத்துகிறார்.


செய்த பாவங்களுக்காக வருந்தி மனம் திரும்பிவிட்டால், அதன் பிறகு வாழ்நாளில் நாம் அந்தத் தவறை மீண்டும் செய்யவே கூடாது. அதுதான் உண்மையான மனம் திரும்புதலாகும். அப்படி மனம் திரும்புகிறவர்கள் கடைசிநேரத்தில் வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்ள அவர் சித்தமாக இருக்கிறார் என்பதே அவர் செய்தியாகும்.