விவசாயிகள் பிரச்சினை குறிதுத திரையில் வலுவாகப் பேசிய "கத்துக்குட்டி" திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் இரா. சரவணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் "கத்துக்குட்டி". 


விவசாயிகள் பிரச்சினையை மையமாக கொண்டு இப்படத்தின் கரு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குறித்து இந்தப் படத்தில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டது.


நரேன் மற்றும் சிருஷ்டி டாங்கே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். காமெடி நடிகர் சூரி நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளித்தார். தஞ்சையில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தஞ்சை மக்களின் வாழ்வியலை உலகுக்கு சொல்லும் வகையில் எடுக்கப்பட்டது.


அரசியல் தலைவர்கள் பலரும் இப்படத்தினை பாராட்டி தங்கள் கருத்தினை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இப்படம் மீண்டும் வரும் மார்ச் மாதம் 23 ஆம் நாள் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.