நிஃபா வைரஸ் தாக்கி பலியான செவிலியரின் கணவருக்கு அரசு வேலை வழங்க கேரளா அரசு முடிவுசெய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிஃபா வைரஸ் தாக்கி செவிலியர் லினி உயிரிழந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட லீனி குடும்பத்தாருக்கு உதவும் வகையில் அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கவும், அவரது குழந்தைகள் இருவருக்கு தலா 10 லட்சம் வழங்கவும் கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதே வேலையில் நிஃபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோருக்கு தலா 5 லட்சம் வழங்கவுள்ளதாகவும் கேரளா அரசு அறிவித்துள்ளது.



கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 


தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. 


இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.