’விலகுவதும் ஆரோக்கியமே’ காதல் செட்டாகாது என முடிவெடுக்க வேண்டிய தருணம்!
காதலில் ஆரோக்கியமான சூழல் இல்லாதபோது விலகுவதும் ஆரோக்கியமே என்கிற தெளிவு இருக்க வேண்டும்.
உணர்ச்சிகளின் சங்கமத்தில் பூக்கும் பூ காதல் என்றால் மிகையில்லை. இதில் அனைத்து சுவைகளையும் நீங்கள் அனுபவிக்கும் சூழலை காலம் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் சிறந்த வாழ்க்கையின் அனுபவ பாடம். அது எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். காதலிக்கும்போது எப்படி ரசனையோடு இருக்கிறீர்களோ, அப்படியே விலகும்போது முதிர்ச்சி தன்மையோடு செயல்படுவதும் சிறந்த காதலனுக்கு எடுத்துக்காட்டு.
காதலைப் பொறுத்தவரையில் பிரேக்கிங் பாயிண்ட் என்று ஒன்று வரும். அதில் நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து சரி செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே அந்த உறவின் விரிசல் விலகுகிறதா இல்லையா? என்பது தெரியும். ஒருவேளை உங்களின் முயற்சி ஒருபோதும் பலனளிக்காது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் தருணத்தில் விட்டு விலகுவது சரியான முடிவு. எந்தெந்த தருணம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் ரீதியாக துன்புறுத்தல்
காதலில் உடல் ரீதியாக அல்லது மனரீதியாக தொடர்ந்து நீங்கள் துன்புறுத்தப்பட்டால், அந்த உறவு நீடித்து இருப்பது கடினம். அன்பு நிறைந்திருக்க வேண்டிய வாழ்க்கையில் துன்பம் பெரும் பங்கு வகிக்கும்போது, விட்டு விலகுவது சரியான முடிவே. மனம், உடல் இரண்டும் உறவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் சில கடினமான சூழல்களை தவிர்த்து எல்லா நேரமும் அப்படியே இருந்தால், அந்த உறவில் ஆரோக்கியம் இல்லை என்று அர்த்தம். சு
உடலுறவில் விருப்பம் இன்மை
துணை விரும்பும் ஆசையை நிறைவேற்ற வில்லை என்றால், அல்லது அதில் ஆர்வம் காட்டாதபோது ஒருவருக்கு வெறுப்பு ஏற்படும். திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அவரவர் விருப்பம் சார்ந்தது. நல்ல காரணங்களுக்காக இன்றி, வெறுப்பின் காரணமாக புறகணிப்பதை கட்டாயம் அறிகுறியாக எடுத்துக் கொண்டு, அவரை விட்டு விலகுவது நல்லது.
நெகடிவ் அணுகுமுறை
உங்கள் துணையுடன் இருக்கும்போது உங்களுக்கு நேர்மறை சிந்தனை ஏற்படவில்லை என்றால் நீங்கள் விழித்துக் கொள்வது நல்லது. எதிர்மறை சிந்தனையுடன் இருப்பவர்கள் அவர்களை மட்டுமல்ல, உங்களையும் மனநோயாளியாக மாற்றிவிடுவார்கள். இதனால், அவர்களை விட்டு நீங்கள் விலகுவதே உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ளும் நியாயம்.
மேலும் படிக்க | உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் பெண்களை விட்டு விலகுவதற்கான 3 காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ