உங்கள் காதலர் அவர் Ex-உடன் நட்பாக இருந்தால் வரும் 8 பிரச்சனைகள்!! உஷாரா இருங்க..
Problems Will Arise If Your Boy Friend Is Friends With His Ex: பலரது பெண்களின் காதலர்கள் தங்களின் முன்னாள் காதலிகளுடன் வேறு ஒரு உறவு வந்த பிறகும் நட்புறவில் இருந்து கொண்டிருப்பர். இது, எந்தெந்த பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் தெரியுமா?
Problems Will Arise If Your Boy Friend Is Friends With His Ex: இன்றைய Gen z உலகில், பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும், காதல் உறவில் இருக்கிறார்கள் என்றால், அந்த உறவு முறிந்த பிறகும் அவர்கள் Ex-உடன் நட்புறவில் இருக்கின்றனர். இதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
1.பொறாமை:
ஒரு சிலருக்கு, தங்களது பார்ட்னர் அவர்களின் எக்ஸ் உடன் நட்பை தொடருவது பொறாமையை ஏற்படுத்தும். நம்மை விட்டுவிட்டு மீண்டும் அவர்களுடன் சென்று விடுவாரோ என்ற பயம் ஏற்படலாம். இதனால், ரிலேஷன்ஷிப்பில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
2.நம்பகத்தன்மை குறைதல்:
நம்பிக்கை என்பதுதான், எந்த உறவிலுமே அடித்தளமாக அமைகிறது. உங்கள் பார்ட்னருக்கு அவரது முன்னாள் காதலி மீது இன்னும் உணர்ச்சிகள் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால் அப்போது அவர் அதே நட்பை தொடர்ந்தால், உங்களுக்கு அவர் மீதிருக்கும் நம்பிக்கை கெட்டு போகலாம். இதனால், நீங்கள் அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்துக்கொண்டே இருப்பீர்கள். இது, உங்கள் காதல் அல்லது திருமண உறவுக்கு கேடு விளைவிக்கலாம்.
3.உணர்ச்சிக் குழப்பம்:
உங்கள் காதலருக்கு அவரது முன்னாள் காதலி மீது தீரா உணர்ச்சிகள் இருந்தால் அவர்களுக்குள் இருக்கும் நட்பு பிரச்சனையில் சென்று முடியலாம். அவர், உங்களை அவரது முன்னாள் காதலியுடன் ஒப்பிட்டு பார்பதற்கும் இந்த உறவையும் முன்னாள் உறவையும் எடை போடுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால், அவரால் உங்களுடன் முழுமையாக உறவில் இருக்க முடியாமல் போகலாம். இதனால், உங்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகள் குழப்பமானதாக இருக்கலாம்.
4.புறக்கணிப்பு:
உங்களுடன் உறவில் இருக்கும் போதே உங்கள் காதலர் அவரது முன்னாள் காதலியுடன் நட்புறவில் இருந்தால் நீங்கள் சில சமயங்களில் புறக்கணிக்க பட்டது போன்ற உணர்வு ஏற்படலாம். அதிலும், அவர் உங்கள் காதல் உணர்வுக்காக செலவு செய்யும் நேரத்தை விட, அவர் முன்னாள் காதலியுடன் நேரம் அதிகமாக செலவிட்டால், நீங்கள் அவர் வாழ்க்கையில் பெரிய நபர் இல்லையோ என்ற உணர்வு உங்களுக்குள் ஏற்படலாம். இதனால் உங்கள் உறவில் திருப்தியற்ற தன்மையும் உணர்வும் ஏற்படலாம்.
5.சமூக சூழ்நிலைகள்:
பல சமயங்களில், ஏதாவது நிகழ்ச்சியில் அல்லது பார்டியில் உங்கள் காதலரின் முன்னாள் காதலியை சந்திக்கும் சூழ்நிலை வரலாம். அப்போது உங்கள் இருவருக்குள் அல்லது உங்களுக்கு சங்கோஜமான உணர்வு ஏற்படலாம். சில சமயங்களில் சண்டை வருவதற்கு கூட வாய்ப்புள்ளது. அப்போது உங்கள் காதலருக்கு முன்னாள் காதலி பக்கம் நிற்பதா, தற்போது இருக்கும் காதலி பக்கம் நிற்பதா என்பது தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார். இதனால், உங்கள் உறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!
6.ஒப்பீடு:
உங்கள் காதலர், உங்களையும் அவரது முன்னாள் காதலியையும் ஒப்பிடவில்லை என்றாலும் நீங்கள் உங்களது மனதிற்குள் எப்போதும் உங்களை அவருடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு, உங்கள் மீதும் உங்களின் அழகு மீதும் பாதுகாப்பின்மை ஏற்படும். நீங்கள் அவர் அளவிற்கு தகுதி பெற்றவராக இல்லையோ, அந்த உறவை போல இப்போதைய காதல் உறவு உங்களின் காதலருக்கு மகிழ்ச்சியை தரவில்லையோ போன்ற கேள்விகளை ஏற்படுத்தும். இதனால் உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அபிப்ராயங்கள் கெட்டு பாேவதோடு, தேவையற்ற குழப்பங்கள் உங்கள் மனதை ஆட்கொள்ளும்.
எந்த சூழலில் உங்கள் காதலர், அவர் Ex-உடன் நட்பாக இருக்கலாம்?
இருவரும் அந்த உறவில் இருந்தும் உணர்ச்சி ரீதியாக முழுமையாக விலகிய பிறகு நட்பாக இருந்தால் பெரிய பிரச்சனை இல்லை.
இருவரும் தாங்கள் இப்போது உள்ள உறவை கெடுத்துக்கொள்ளாத வகையில் நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை.
இருவரும் அவர்களின் நட்பு குறித்து உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டு, சொன்னது போல வெறும் நண்பர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை.
இருவரும் ஒரே இடத்தில் பணி புரிய வேண்டும் அல்லது ஒன்றாக சேர்ந்து படிக்க வேண்டும் என்ற சூழல் வரும் போது நட்பாக இருந்து கொள்ளலாம்.
உங்கள் காதலர், அவரது முன்னாள் காதலியுடனான நட்பில் என்ன நடக்கிறது என்பதை உங்களிடம் ஒன்று விடாமல் கூறினால், அப்போது அவர் அந்த நட்பை தொடரலாம்.
மேலும் படிக்க | நல்ல மனசு கொண்டவர்களை ‘இந்த’ 7 அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ