தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!

Long Distance Relationship Tips : பலர், தொலை தூரத்தில் இருந்து கொண்டே காதலை வளர்த்துக்கொண்டிருப்பர். அவர்களுக்கான சில டிப்ஸ், இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Aug 2, 2024, 05:26 PM IST
  • நெடுந்தூர காதலுக்கான டிப்ஸ்
  • நெருக்கத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
  • இதோ அதற்கான டிப்ஸ்!
தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்! title=

Long Distance Relationship Tips : கண்டதும் காதல், காணாமலே காதல், காண காண காதல் என காதலில்தான் எத்தனை வகைகள்? எங்கேயும் காதல் படத்தின் வரும் பாடலைப் போல, முகங்களையும் உடல் நிலங்களையோ பார்க்காமல் வரும் இந்த காதலை உலகில் வாழும் அனைவரும் ஏதேனும் ஒரு இடத்தில் அனுபவித்திருப்போம். இதில் ஒரு சிலர் தன் காதலி அல்லது காதலனை வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு வழி அனுப்பி வைத்துவிட்டு கையில் கிடைக்கும் கடிதங்கள் மூலமாகவும் செல்போன் மூலமாகவும் காதலை வளர்த்துக் கொண்டிருப்பார். இதற்கு ஆங்கிலத்தில் long distance relationship என்று பெயர். இந்த உறவில் இருப்பவர்கள் பிற காதலர்களை விட அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நெடுந்தூர காதல் உறவை வலுவாக்க டிப்ஸ் கலை இங்கு பார்ப்போம்.

தொலைபேசி: 

நாம் ஒருவருடன் டச்சில் இல்லை எனும் போது அந்த உறவு வெகு விரைவில் முறிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அது நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. எனவே லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது இருவருக்கும் வெவ்வேறு நேர காலங்கள் இருந்தாலும் மொபைலில் எப்போதும் கணத்திலேயே இருக்க வேண்டும். இருவரும் தினசரி என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள் என்பதை தெரிவித்து கொள்ளுங்கள். இதனால், உங்களின் மன நலனுக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இருவரின் நலன் விரும்பிகளாகவும் இருவரும் இருக்க வேண்டும். 

உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்:

நண்பராக இருந்தாலும் கூட, அவரிடம் நாம் எப்போதும் போல பாசமாக பேசவில்லை என்றால் அவருக்கு தெரிந்து விடும். இதனால், அந்த உறவு நீடித்து நிலைக்காமலும் போகலாம்.  தொலைதூர உறவை பொறுத்தவரை, உங்கள் காதலருக்கு அவர்களின் மதிப்பு மற்றும் உங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது, நெடுந்தூர காதல் உறவில் மிகவும் முக்கியமானதாகும். அதே போல, அவர்களின் மதிப்பை நீங்கள் அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கையில், அவருக்கும் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை இரட்டிப்பாகும். 

மேலும் படிக்க | அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறீங்களா... திருமணத்திற்கு முன் பார்ட்னரிடம் கேட்க வேண்டிய 4 கேள்விகள்!

தவறான புரிதல்கள்:

அனைத்து உறவுகளையும் போல, காதல் உறவிலும் சில விஷயங்களை பேசிக்கொள்ளாமல் போவதால் தவறான புரிதல்கள் உண்டாகலாம். இதனால் சிறிதாக விழுந்த விரிசல், பின்பு பெரிதாக மாறலாம். எனவே இது போன்ற தவறான புரிதல்கள் ஏற்பட்டிருந்தால், அதை உடனே பேசி களைந்து விட வேண்டும். அந்த பிரச்சனையை பற்றி பேசாமல் அதை தள்ளிப்போடுவதால் அது ஒரு நாள் பெரிதாக வெடிக்கலாம். 

ஒன்றாக பயணம் மேற்கொள்ளுதல்:

பல ஆண்டுகளாக சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல. தொடர்ந்து ஒன்றாக ஒரு பயணத்தை இருவரும் மேற்கொள்ளலாம். இது, இருவரும் காதலில் மீண்டும் கனெக்ட் ஆக உதவும். இதனால், நீங்கள் நினைவுகளை உருவாக்குவதோடு மட்டுமன்றி அதை பல ஆண்டுகள் அசைபோடவும் முடியும். ஒருவருடன் ஒரு பயணத்தை மேற்கொண்டாலே போதும், அவருடைய குணாதிசயம் பற்றியும், அவர் எப்படிப்பட்டவர் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என கூறுவர். எனவே, இருவரும் ஒருவரது மனதிற்குள் இன்னொருவர் ஆழமாக நுழைய கண்டிப்பாக ஒரு பயணத்தை மேற்கொள்வது நல்லதாகும்.

மேலும் படிக்க | உங்களுக்கு காதலுக்கு முக்கிய எமனே 'இதுதான்...' பிரச்னைகளை தவிர்க்க சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News