7th Pay Commission: மாத இறுதிக்குள் 2 குட் நியூஸ்? காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
DA Arrear: 18 மாத டிஏ அரியர் தொகை குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும். இது ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும்.
7வது ஊதியக்குழு செய்திகள்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் இரண்டு நல்ல செய்திகள் கிடைக்கும். பிரதமர் மோடி விரைவில் ஊழியர்களுக்கு 2 பெரிய பரிசுகளை வழங்க உள்ளார்.
ஊடக அறிக்கைகளின் படி, மையத்தில் உள்ள மோடி அரசாங்கம் விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி-யை மீண்டும் 3 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். அதன் பிறகு மொத்த டிஏ 31% இல் இருந்து 34% ஆக அதிகரிக்கும்.
மேலும், 18 மாத டிஏ அரியர் தொகை குறித்தும் இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும். இது ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் சுமார் 68 லட்சம் ஊழியர்கள் மற்றும் 48 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். எனினும், இது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்லது புதுப்பிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
செப்டம்பர் 2021 வரை வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ தரவுகளின்படி அகவிலைப்படி 32.81 சதவீதமாகவும், நவம்பரில் வெளியிடப்பட்ட தரவுகளுக்குப் பிறகு ஏஐசிபிஐ குறியீடு 125.7ஐயும் எட்டியிருப்பதாலும், 2 அல்லது 3 சதவீத டிஏ அதிகரிப்பு நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது. தற்போது, செப்டம்பர் 2021 வரை AICPI தரவுகளின்படி அகவிலைப்படி 32.81 சதவீதமாக உள்ளது. டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. டிசம்பர் 2021-ன் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும்.
இது தவிர, ஜனவரி முதல் ஜூலை வரையிலான 18 மாதங்களுக்கான அகவிலைப்படி அரியர் தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. மாத இறுதிக்குள் இது தொடர்பாக பெரிய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் தீர்வு காணப்படலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் 31-க்குள் இதை செய்தால் ஊதியத்தில் இந்த தொகையும் கூடும்
இந்நிலையில், நிலுவையில் உள்ள டி.ஏ. ஒரே முறையில் வழங்கப்பட வேண்டும் என தேசிய கூட்டு ஆலோசனை கவுன்சில் செயலர் கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், இந்திய ஓய்வூதியர் மன்றமும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, அவர் இதில் தலையிட்டு, அரியர் தொகை முழுவதும் ஊழியர்களுக்கு கிடைக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
34% அகவிலைப்படிக்கான கணக்கீடு:
- மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 2% அல்லது 3% அதிகரித்தால், அது 31 சதவீதத்தில் இருந்து 33% அல்லது 34% ஆக உயரும். டிஏ 33% ஆகவும், அடிப்படை சம்பளம் ரூ 18,000 ஆகவும் இருந்தால், ஊழியர்களுக்கான டிஏ ரூ 5940 ஆகவும், டிஏ-ஹெச்ஆர்ஏ-வைச் சேர்த்தால் சம்பளம் ரூ 31,136 ஆகவும் இருக்கும்.
- டிஏ 34 சதவீதமாக இருந்தால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு ரூ.6,480 ஆகவும், ரூ.56,000 சம்பளம் கொண்டவர்களுக்கு அதிகரிப்புஆண்டுக்கு ரூ.20,484 ஆகவும் இருக்கும். இதன் மூலம் சுமார் 1 கோடியே 68 லட்சம் ஊழியர்கள் மற்றும் 48 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
அகவிலைப்படி கணக்கீட்டின் முழுமையான விவரம் இதோ:
உதாரணத்திற்கு-
- நிலுவையில் உள்ள டிஏ குறித்து முடிவு எடுக்கப்பட்டால், ஜனவரி முதல் ஜூன் வரையிலான சம்பளம் சுமார் 2 லட்சம் வரை வழங்கப்படும்.
- ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 என்றால், அவர் 3 மாதங்களுக்கு (4,320+3,240+4,320) = ரூ.11,880க்கான டிஏ நிலுவைத் தொகையைப் பெறலாம்.
- ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.56,000 என்றால் அவருக்கு 3 மாத டிஏ பாக்கி (13,656 + 10,242 + 13,656) = ரூ.37,554 கிடைக்கும்.
- லெவல்-1 ஊழியர்களுக்கான டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையிலும், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) மற்றும் லெவல்-14 (ஊதிய அளவு) 1 டிஏ பாக்கி ரூ.44,200 முதல் ரூ.2,18,200 வரையிலும் இருக்கக்கூடும்.
(இந்த எண்ணிக்கை ஒரு உதாரணமாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது, இது மாற்றத்திற்கு உட்பட்டது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR