7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அதிகரிப்பு, மாத இறுதிக்குள் அறிவிப்பு?

7th Pay Commission: ஊழியர்கள் ஏற்கனவே 31% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். எனினும், ஜனவரி 2022 முதல், ஊழியர்கள் 3% கூடுதல் அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2022, 12:12 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது.
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அதிகரிப்பு, மாத இறுதிக்குள் அறிவிப்பு?  title=

டிஏ அரியர் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்கும்.

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI இன்டெக்ஸ்) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. அகவிலைப்படிக்கான 12-மாத குறியீட்டின் சராசரி 351.33 ஆக உள்ளது. இதன் சராசரி 34.04% ஆகும். எனினும், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அரசு எப்போது அறிவிக்கக்கூடும் என்று இங்கே பார்க்கலாம். 

எப்போது அறிவிக்கப்படும்? 

தற்போது, ​​ஊழியர்கள் ஏற்கனவே 31% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். எனினும், ஜனவரி 2022 முதல், ஊழியர்கள் 3% கூடுதல் அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, புதிய நிதியாண்டுக்கு முன்பே அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம். 

ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் குறைந்தது

அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ-ஐடபிள்யூ (தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பரில், இந்த எண்ணிக்கை 125.7 புள்ளிகளாக இருந்தது. டிசம்பரில் 0.24% குறைந்துள்ளது. ஆனால், இது அகவிலைப்படி உயர்வை பாதிக்கவில்லை. தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பரில் அதிகரிக்கப்பட்டது

தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவானது. இப்போது டிசம்பர் 2021 இன் எண்ணிக்கையில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2022 இல், 3 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. இப்போது 3 சதவீத உயர்வுக்குப் பிறகு இது 34 சதவீதத்தை எட்டும்.

மேலும் படிக்க | 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! எதிர்பார்த்த அளவு அகவிலைப்படி உயராது? காரணம்?

ஜூலை 2021 முதல் டிஏ கணக்கீடு

ஜூலை 2021 - AICPI-353 - அகவிலைப்படி - 31.81%
ஆகஸ்ட் 2021 - AICPI-354 - அகவிலைப்படி -  32.33%
செப்டம்பர் 2021 - AICPI- 355- அகவிலைப்படி -  32.81%
நவம்பர் 2021 - AICPI - 362.016- அகவிலைப்படி -  33 %
டிசம்பர் 2021  - AICPI - 361.152 - அகவிலைப்படி - 34%

அகவிலைபப்டி எண்களின் கணக்கீடு

ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016
டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.4 X 2.88 = 361.152

34% அகவிலைப்படியில் கணக்கீடு

அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைபப்டி 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசும்போது, சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News