7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்குமா DA, DR அரியர் தொகை? அரசு கூறுவது என்ன?
அகவிலைப்படி பற்றி அரசாங்கம் அறிவித்தபோது, ஊழியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டது. அரசாங்கம் நிலுவைத் தொகையை அளிக்க மறுத்துவிட்டது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் 28% அகவிலைப்படி வரத் தொடங்கிவிட்டது. எனினும், ஒரு விஷயத்தில் அவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் உள்ளது. ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகை தொடர்பான அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
அகவிலைப்படி பற்றி அரசாங்கம் அறிவித்தபோது, ஊழியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டது. அரசாங்கம் நிலுவைத் தொகையை அளிக்க மறுத்துவிட்டது.
நிலுவைத் தொகை பற்றிய முடிவை பிரதமர் மோடி எடுப்பார்
இப்போது 18 மாத நிலுவைத் தொகை பற்றிய விவகாரம் பிரதமர் நரேந்திர மோடியை (PM Modi) எட்டியுள்ளதாக செய்தி வருகிறது. ஆகையால், இனி, நிலுவைத் தொகை குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். இந்த செய்திக்குப் பிறகு நிலுவை தொடர்பான மத்திய அரசு ஊழியர்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி 18 மாத நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் அளித்தால், சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் ஒரு பெரிய தொகை வரும்.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28% ஆக உயர்ந்துள்ளது. 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இதன் பலனைப் பெறுகின்றனர்.
ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?
பிரதமர் மோடிக்கு ஓய்வூதியதாரர்களின் கடிதம்
இந்திய ஓய்வூதியதாரர்கள் அமைப்பு (BMS) அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் நிலுவைத் தொகை வழங்குவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிஎம்எஸ் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிஎம்எஸ், ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை இடைநிறுத்தப்பட்ட டிஏ / டிஆர் நிலுவைத் தொகையை விரைவில் வெளியிடுமாறு நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், நாங்கள் இதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என அமைப்பு தெரிவித்துள்ளது. டிஏ/டிஆர் (DA / DR) நிறுத்தப்பட்ட காலகட்டத்தில், சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது, பெட்ரோல்-டீசல், சமையல் எண்ணெய், பருப்புகளின் விலைகள் என அனைத்திலும் விலை உயர்வு சாதனை அளவுகளை எட்டியுள்ளது என ஓய்வூதியதாரர்கள் வாதிடுகின்றனர்.
18 மாத நிலுவைத் தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நிதி அமைச்சகம் மே 2020 இல், 30 ஜூன் 2021 வரை டிஏ உயர்வை நிறுத்தியது. இந்த தடை 1 ஜூலை 2021 முதல் நீக்கப்பட்டது. அப்போதிருந்து அகவிலைப்படியின் மூன்று தவணைகள் வெளியிடப்பட்டன. இதில், ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 என மொத்தம் 11 சதவீத டிஏ வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.
மழைக்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில், எழுத்துப்பூர்வ அறிக்கை மூலம், மாநில நிதி அமைச்சர், நிலுவைத் தொகை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
ஓய்வூதியதாரர்களுக்கு இது சரியான முடிவு இல்லை
அன்றாட செலவுகளில் ஏற்படும் அதிகரிப்புக்கு ஈடுசெய்ய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) டிஏ/டிஆர் வழங்கப்படுகிறது. 18 மாதங்களில், செலவு மிக வேகமாக அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த காலத்திற்கான பணத்தை நிறுத்தி வைப்பது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீங்கு விளைவிப்பது போன்றதாகும்.
பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் வயதானவர்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும், கோவிட் -19 நெருக்கடியால், பெரும்பாலான ஓய்வூதியதாரர்களின் வருமானம் அவர்களது அன்றாட செலவுக்கே சரியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்பது தங்களுக்கும் புரிகிறது என்று BMS கூறியுள்ளது. பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர நிவாரண நிதிக்கு (PM CARES) ஒரு நாள் ஓய்வூதியத்தை வழங்கியுள்ளனர். இப்போது அவர்களுக்குத் தேவைப்படும்போது, அரசு அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ALSO READ: 7th Pay Commission: குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு அளித்த மிகப்பெரிய நிவாரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR