7th Pay Commission: குடும்ப ஓய்வூதியத்திற்கான நன்மைகளைப் பெற்று வருபவர்களுக்கு அரசாங்கம் ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. ஆம்!! 45 ஆயிரம் ரூபாயாக இருந்த ஓய்வூதியத்தின் வரம்பை, அரசு, இரண்டரை மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது, இப்போது குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒவ்வொரு மாதமும் 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முடிவினால், இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு (Family Pension) வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், அவர்கள் நிதி பாதுகாப்பின் பலனை பெறுவார்கள் என்றும், அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.


அரசு ஓய்வூதியத்தை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது


முன்பு, ஒவ்வொரு மாதமும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் இனி அவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதாவது, அவர்கள் பெற்று வந்த தொகை இரண்டரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து பெறப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் இது வழங்கப்பட்டது.


இரண்டு ஓய்வூதியங்களின் பலனைப் பெற முடியும்


மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972 இன் விதி 54 ன் துணை விதியின் (11) படி, கணவன்-மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, இந்த விதியின் கீழ் வந்து, இருவரும் மரணித்தால், அவர்களது குழந்தைக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியங்கள் கிடைக்கும்.


ALSO READ: 7th Pay Commission எச்சரிக்கை: ஊழியர்கள் இந்த விதிகளை மீறினால் உடனே நடவடிக்கை


ஓய்வூதியத் தொகையில் முன்னரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன

முன்னர், ஒவ்வொரு மாதமும் குடும்ப ஓய்வூதியம், 45 முதல் 27 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது. 6 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, 90,000 ரூபாயை விட அதிகமான தொகைக்கு இது 50% மற்றும் 30% ஆக இருந்தது. முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இரண்டு குடும்ப ஓய்வூதியங்களின் மொத்த தொகை மாதத்திற்கு ரூ. 45,000 மற்றும் மாதத்திற்கு ரூ .27,000, அதாவது 50% மற்றும் 30% ஐ தாண்டக்கூடாது என்று கூறப்பட்டது. ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் (Pay Commission) பரிந்துரைகளின்படி, அதிகபட்ச சம்பளமான ரூ .90000 ஐக் கொண்டு இந்த விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.


7 வது சம்பள கமிஷனுக்கு பிறகு (7th pay commission), அரசு வேலைகளில் பணம் செலுத்துவது மாதத்திற்கு 2.5 லட்சமாக திருத்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 1972 இன் விதி 54 இல் துணை விதியின் (11) கீழ் இந்த தொகையும் மாற்றப்பட்டுள்ளது. திருத்தத்தின் படி, ரூ. 2.5 லட்சத்தில் 50% அதாவது ரூ .1.25 லட்சம் மற்றும் ரூ .2.5 லட்சத்தில் 30% அதாவது ரூ .75 ஆயிரமாக மாற்றப்பட்டுள்ளது.


ALSO READ: 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR