7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வீடு கட்டும் எண்ணத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் வீட்டைக் கட்ட மார்ச் 31, 2022 வரை வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance) பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 31 மார்ச் 2022 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.9 சதவீத வட்டி விகிதத்தில் வீடு கட்டுவடதற்கான முன்பணத்தை வழங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணத் திட்டத்தை (HBA Scheme) மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. அதாவது, ஒரு அரசு ஊழியர் சொந்த வீட்டை வாங்கவோ கட்டவோ விரும்பினால், அவர் மார்ச் 2022 வரை மலிவு விலையில் வீட்டுக் கடன் பெற முடியும்.
வீடு கட்டுவதற்கு மலிவான முன்பணம்
7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மற்றும் எச்.பி.ஏ விதிகளின் பரிந்துரைகளின்படி, புதிய வீடு கட்ட அல்லது புதிய வீடு-பிளாட் வாங்க, 34 மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ .25 லட்சம் அல்லது வீட்டின் விலை அல்லது முன்பணத்தை திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கான அட்வான்சை ஊழியர்கள் பெறலாம். அட்வான்ஸ் தொகைக்கு 7.9% வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
HBA என்றால் என்ன?
மத்திய அரசு (Central Government) தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance ) வழங்குகிறது. இதில், ஊழியர் சொந்தமாக அல்லது அவரது மனைவியின் மனையில் வீடு கட்ட முன் பணம் பெறலாம். இந்த திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 31 மார்ச் 2022 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.9% வட்டி விகிதத்தில் வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது.
ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை ஊதிய அதிகரிப்பு பற்றிய முக்கிய செய்தி
வீட்டை மாற்றியமைக்க / பெரிதாகக் கட்ட முன்பணம் கிடைக்கும்
House Building Advance விதிகளின்படி, வீட்டின் விரிவாக்கத்தை செய்ய, மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் அல்லது 34 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம், வீட்டை விரிவாக்கம் செய்யும் செலவு அல்லது முன்பணத்தை திருப்பிச் செலுத்தும் திறன், இவற்றில் எது குறைவாக உள்ளதோ, அந்த தொகை முன்பணமாக வழங்கப்படும்.
முன்பணமாக பெறப்பட்ட தொகை, மூலதனமாக, முதல் 15 ஆண்டுகள் அல்லது 180 மாதங்களில் வசூலிக்கப்படும். மீதமுள்ள ஐந்து ஆண்டுகளில் அதாவது 60 மாதங்களில், அதை வட்டியாக EMI யில் திருப்பித் தர வேண்டும். முன்பணம் 7.9% என்ற விகிதத்தில் கிடைக்கும்.
முன்பணம் பெற்று வங்கியின் வீட்டுக் கடனை செலுத்தலாம்
ஒரு புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது பிளாட் வாங்கவோ ஒரு அரசு ஓழியர் (Government Employee) வங்கியிலிருந்து வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதை முன்பணம் எடுத்து திருப்பிச் செலுத்தலாம். இந்த முன்பணம் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் கிடைக்கும். ஆனால் தற்காலிக ஊழியர்களின் பணி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்.
ஊழியர்கள் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய நாளிலிருந்தே இந்த முன்பணத்தைப் பெறுவார்கள். ஊழியர்கள் முன்பணத்துக்காக முன்னரே விண்ணப்பித்திருந்தாலும், வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு கடன் கிடைத்த நாளிலிருந்துதான் முன்பணம் கிடைக்கும். வங்கியில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வசதியாக மொத்தமாக முன்பணம் வழங்கப்படும். இருப்பினும், ஊழியர்கள் முன்பணம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் HBA பயன்பாட்டு சான்றிதழை (HBA Utilization Certificate) சமர்ப்பிக்க வேண்டும்.
ALSO READ: 7th Pay Commission: இந்த ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி, அதிகரித்தது ஓய்வூதியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR