கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அந்த பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலைப்படியை தமிழக அரசு அதிகரிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அகவிலைப்படி (Dearness allowance) உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் நடக்கும் என அன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ALSO READ: 7th Pay Commission: 8 லட்சம் PSU ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டி.ஏ அதிகரிக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவகங்கை வட்டக்கிளை தலைவர் ராமசாமி கூறியதாவது.,
தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்திருந்து இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வினை, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மாநில அரசு அறிவிக்கும். அகவிலைப்படி என்பது விலை வாசி உயர்வு சதவீதத்திற்கேற்ப விலை குறியீட்டு எண்ணை கணக்கிட்டு வழங்குவதாகும். கொரோனா பரவல் காரணமாக ஏற்படும் இழப்பீடுகளை சரி கட்ட மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் ஜூன் 2021 வரை 18 மாத காலத்திற்கு அகவிலைப்படி உயர்வை தள்ளி வைத்தது.
அதன்படி இந்த தற்போது மத்திய அரசு 2020 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது. இந்த அடிப்படையில் மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதன்படி தற்போது அகவிலைப்படி உயர்வினை 11 சதவீதம் உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலை நிவாரண அதிகரிப்பை அரசாங்கம் முடக்கியது. தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 சதவீத அகவிலை நிவாரணம் (Dearness Relief) வழங்கப்படுகிறது. இயக்குநர் மீனு பத்ராவின் உத்தரவின்படி, மத்திய சுதந்திரப் போராட்ட ஓய்வூதியதாரர்கள் (central freedom fighter pensioners), அவர்களைச் சார்ந்தவர்கள் அல்லது அவர்களின் மகள்களுக்கு அளிக்கப்படும் அகவிலை நிவாரணத்தை 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR