7th Pay Commission எச்சரிக்கை: ஊழியர்கள் இந்த விதிகளை மீறினால் உடனே நடவடிக்கை

வீடு கட்டுவதற்கான முன்பணம் வாங்கும் ஊழியர்கள், தங்கள் வீட்டை காப்பீடு செய்ய வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்க வெண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 03:05 PM IST
7th Pay Commission எச்சரிக்கை: ஊழியர்கள் இந்த விதிகளை மீறினால் உடனே நடவடிக்கை  title=

7th Pay Commission Latest News: மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது. இதில் வீடு கட்ட முன்பணம் (House Building Advance) அளிக்கப்படும் வசதியும் உள்ளது, இது ஊழியர்களுக்கு வீடு கட்ட அளிக்கப்படும் நிதி உதவியாகும்.

நீங்களும் ஒரு மத்திய ஊழியராக இருந்து, அரசாங்கத்தின் இந்த வசதியின் கீழ் பணம் பெற்றிருந்து, ஆனால் விதிகளின் படி வீடு கட்ட அதை பயன்படுத்தவில்லை என்றால், உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

எச்.பி.ஏ திட்டத்தின் கீழ் வீடு அல்லது மனை வாங்கவோ அல்லது வீடு கட்டவோ பணம் பெற்றவர்கள், வீடு கட்டுவதற்கான முன்பண விதிகள் (எச்.பி.ஏ) - 2017 இன் (House Building Advance Rules (HBA)- 2017) விதி 7 பி -யை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

தபால் துறையில் ஏடிஜி (எஸ்டேட்) டி.கே. திரிபாதியி" எச்.பி.ஏ எடுக்கும் பல ஊழியர்கள் இந்த விதியை பின்பற்றுவதில்லை. விதியை பின்பற்றாவிட்டாலும் தப்பித்து விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக அனைத்து வட்டங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது குறித்த நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.

ALSO READ: 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது

Rule 7b என்றால் என்ன

இந்த விதியின் கீழ், வீடு கட்டுவதற்கான முன்பணம் வாங்கும் ஊழியர்கள் (Central Government Employees), தங்கள் வீட்டை காப்பீடு செய்ய வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்க வெண்டும். காப்பீடு செய்யப்பட்ட தொகை HBA அளவுக்கு சமமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. டி.கே. திரிபாதி 'விதி புத்தகத்தின்படி, வீட்டின் காப்பீட்டை காப்பீட்டு சீராக்கி ஐ.ஆர்.டி.ஏ அங்கீகரித்த காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து எடுக்க வேண்டும், மேலும் பாலிசியின் நகலை உங்கள் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.’ என்று கூறினார்.

வீட்டுக் காப்பீட்டில் எதற்கெல்லாம் பாதுகாப்பு கிடைக்கும்? 

HBA இன் கீழ் எடுக்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கை பல விபத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, வீட்டில் ஏற்படும் தீ விபத்து, வெள்ளம் மற்றும் மின்சார விபத்து போன்றவை இதில் கவர் செய்யப்படும். ஊழியர் அட்வான்ஸ் பணத்தை செலுத்தும் வரை இந்தக் கொள்கை நடைமுறையில் இருக்கும்.

டி.கே. திரிபாதி, 'ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கொள்கை சான்றிதழின் நகலை ஊழியர்களிடமிருந்து பெற வேண்டும் என HoD-களுக்கு கூறப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களும் இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.’ என்று கூறினார்.

HBA என்றால் என்ன

மத்திய அரசு (Central Government) தனது ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance) அளிக்கிறது. இதில், பணியாளர் தனது சொந்த அல்லது மனைவியின் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பணம் வாங்கலாம். இந்த திட்டம் 2020 அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 2022 மார்ச் 31 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.9% வட்டி விகிதத்தில் வீடு கட்டுவதற்கான முன்பணம் வழங்கப்படுகிறது.

7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மற்றும் எச்.பி.ஏ விதிகளின் பரிந்துரைகளின்படி, புதிய வீடு கட்ட அல்லது புதிய வீடு-பிளாட் வாங்க, 34 மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ .25 லட்சம் அல்லது வீட்டின் விலை அல்லது முன்பணத்தை திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கான அட்வான்சை ஊழியர்கள் பெறலாம். அட்வான்ஸ் தொகைக்கு 7.9% வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை ஊதிய அதிகரிப்பு பற்றிய முக்கிய செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News