7th Pay Commission: அகவிலைப்படியில் அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். எனினும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் கீழ், குழந்தை கல்வி கொடுப்பனவு (CEA Claim Rule) கோருவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. சி.இ.ஏ கிளெயிம் செய்ய சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து (Central Government Employees) சுய சான்றிதழ் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முறைகளைத் தவிர தேர்வு முடிவுகள் / ரிபோர்ட் கார்ட் / கட்டணம் செலுத்திய மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ்.ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் மூலமாகவும் கிளெயிம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.


கோவிட் -19 காரணமாக எடுக்கப்பட்ட முடிவு


2020-21 கல்வியாண்டில் கோவிட் (COVID 19) காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி மத்திய அரசு ஊழியர்கள் சி.இ.ஏ இன் கீழ் மாதந்தோறும் ரூ .2250 பெறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 


COVID-19 தொற்றுநோயால் CEA ஐ கோருவதில் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் குழந்தைகளது தேர்வு முடிவுகள் / ரிபோர்ட் கார்ட் ஆகியவை பள்ளிகள் மூளம் எஸ்.எம்.எஸ் வழியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படவில்லை. 


ALSO READ:7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அரியர் நிலுவை கிடைக்கும்  


ஊழியர்களின் இந்த சிக்கலை சமாளிக்க, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து சுய சான்றிதழ் மூலமாகவோ அல்லது தேர்வு முடிவுகள் / ரிபோர்ட் கார்ட் / கட்டணம் செலுத்திய மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ்.ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் மூலமாகவோ இப்போது கூடுதலாக CEA-க்கான கிளிஎய்மை கோர முடியும். 


DoPT சுற்றறிக்கையை வெளியிட்டது


இந்த விதி குறித்து DoPT ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே தீர்வு காணப்பட்ட சி.இ.ஏ கிளெயிம் கோரல்களை மீண்டும் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று டிஓபிடி திட்டவட்டமாக கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மத்திய அரசு CEA ஊழியர்களின் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவர்களது பள்ளிக்கல்வி மற்றும் விடுதிகள் போன்றவற்றுக்கு ஆகும் செலவுக்கு உதவுகிறது.


7 வது ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்படுகிறது


7 வது ஊதியக்குழு (7th Pay Commission) ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ .2250 என்ற விகிதத்தில் சி.இ.ஏ. உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என 7 ஆவது ஊதியக்குழு தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு விடுதி மானியத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விகிதம் 6750 ரூபாய் ஆகும். அகவிலைப்படி 50 சதவீதம் அதிகரிக்கும் போதெல்லாம், சி.இ.ஏ மற்றும் விடுதி மானியமும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் 7 வது ஊதியக்குழு ஆணையம் கூறியிருந்தது.


ALSO READ:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி வழங்கப்படுமா; அரசு கூறுவது என்ன  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR