7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அரியர் நிலுவை கிடைக்கும்

DA-TR தொடர்பாக மத்திய அரசின் முக்கியமான முடிவு. ஊழியர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 1, 2021, 03:50 PM IST
  • DA-TR தொடர்பாக மத்திய அரசின் முக்கியமான முடிவு
  • ஊழியர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்
  • கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டி.ஏ., ஜூலை மாதம் கொடுக்கப்படும்
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அரியர் நிலுவை கிடைக்கும் title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டை சலுகைகள் கிடைக்கும்.

DA-TR தொடர்பாக மத்திய அரசின் முக்கியமான முடிவு. ஊழியர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும். 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டை சலுகைகள் கிடைக்கும்.

கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டி.ஏ., ஜூலை மாதம் கொடுக்கப்படும். ஆனால், அது செப்டம்பர் மாதத்தில் தான் பயனர்களின்   கணக்கிற்கு வரும். இது குறித்து ஜே.சி.எம் தேசிய கவுன்சில் (JCM National Council) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் நகல் ஜூ மீடியாவுக்கு கிடைத்துள்ளது.

Also Read | Big Change by SBI: நாளை முதல் மாறுகின்றன இந்த முக்கிய விதிகள், மக்களே கவனம்

ஜே.சி.எம் தேசிய செயலாளர் சிவ் கோபால் மிஸ்ரா 7 வது ஊதியக்குழு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 26 அன்று அமைச்சருடனான சந்திப்பு சாதகமக இருந்ததாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களாக முடக்கப்பட்ட  அகவிலைப்படி மீண்டும் ஜூலை மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், முந்தைய மூன்று தவணைகள் ஜூலை மாதத்தில் கொடுக்கப்படாது. 

அகவிலைப்படி மற்றும் பயணப்படி மீதான தடையை அகற்ற அமைச்சர் ஒப்புக் கொண்டதாக சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்தார். இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 2020, ஜூன் 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகியவற்றுக்கான இடைநிறுத்தப்பட்ட தொகையைப் பெறுவார்கள். இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் செப்டம்பர் மாதத்தில் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது சுமார் 17 சதவீதம் அகவிலைப்படி பெறுகின்றனர். ஆனால் முந்தைய மூன்று நிறுத்தங்களையும் சேர்த்தால், அது 28 சதவீதமாக இருக்கும். ஜூன் 2021 இல் இது மீண்டும் 3% உயரும் என்று 7 வது ஊதியக்குழு கணித்துள்ளது. அப்படி நடந்தால், அரசு ஊழியர்களின் மொத்த டிஏ 28% + 3% = 31% ஆக இருக்கும், அதோடு, இந்த டிஏ செப்டம்பர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும்.

Also Read | Aadhaar Card Latest News: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்: ட்வீட் செய்த UIDAI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News