7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, நாளை கிடைக்கும் குட் நியூஸ்
7th Pay Commission: மார்ச் 1 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படி அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படக்கூடும்.
7வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மார்ச் 1 (1 மார்ச் 2023) மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகும். அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கும் நாளை மத்திய அரசு பெரும் பரிசை வழங்கவுள்ளது. நாளை ஊழியர்களின் அகவிலைப்படி குறித்த முடிவு எடுக்கப்படும். இதனுடன், உயர்த்தப்பட்ட அகவிபைப்படி பற்றிய அறிவிப்பும் வெளியாகும். அதாவது மார்ச் மாதத்தில் ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர்த்தப்பட உள்ளது. ஊழியர்களின் ஊதியத்தில் சுமார் ரூ. 27,312 என்ற திட்டவட்டமான அதிகரிப்பு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது
மார்ச் 1 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படி அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படக்கூடும். ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், மார்ச் மாதத்தில், ஊழியர்களுக்கு 42 சதவீதம் என்ற விகிதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கிறது.
சம்பளம் எந்த அளவுக்கு உயரும்?
அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அகவிலைப்படி அதிகரிக்கப்படும். இதற்குப் பிறகுதான், ஊழியர்களின் கணக்கில் பெருமளவு சம்பளம் வரவு வைக்கப்படும். இதனுடன், ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் கிடைக்கும். அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்த பிறகு, ஊழியர்களின் ஊதியம் மாதம் ரூ.720ல் இருந்து ரூ.2276 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மேலும் படிக்க | 8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ
ஊழியர்களின் சம்பளம் 27,312 ரூபாயாக அதிகரிக்கும்
ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 எனில், அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.720 உயர்வு கிடைக்கும். அதாவது ஆண்டு அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.8640 உயர்வு இருக்கும். மறுபுறம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.56,900 என்றால், அவர்களின் சம்பளம் மாதம் ரூ.2,276 ஆக உயரும். அதாவது சம்பளம் ஆண்டு அடிப்படையில் ரூ.27,312 அதிகரிக்கும்.
ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது
ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். ஜூலை 2022 இல், அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்! எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ