7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை முடக்கத்தை அரசு நீக்கியுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்து முடக்க நீக்கத்துக்கான செய்தியை பெற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இப்போது மற்றொரு நல்ல செய்தி ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடும். மத்திய அரசு ஊழியர்கள் ஜூன் மாதத்தில் 3% டிஏ உயர்வு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இது அகவிலைப்படியை 28% க்கு பதிலாக 31% ஆக உயர்த்தும்.


ஜூன் மாதத்திற்கான டிஏ உயர்வு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3% டிஏ உயர்வு (DA Hike) 2021 ஜனவரி முதல் மே மாதத்திற்கான AICPI தரவின் அடிப்படையில் கருதப்படுகிறது. இது விரைவில் அறிவிக்கப்படும் என்று ஜேசிஎம் செயலாளர் (ஊழியர் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு ஊழியர்கள் நிலுவையில் உள்ள டிஏ அதிகரிப்பைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். ஜனவரி 2020 இல், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தது, ஜூன் மாதத்தில் அது 3 சதவிகிதம் அதிகரித்தது, பின்னர் ஜனவரி 2021 இல் 4 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்புகளில், அகவிலைப்படி மொத்தம் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 28%ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி மொத்தமாக 31 சதவிகிதத்தை எட்டும் (17+4+3+4+3).


ALSO READ: 7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு


கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த டிஏ முடக்கத்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 28% வீதம் டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.


7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் நிலை -1 இன் சம்பள வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56900 வரை இருக்கும். குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000. செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை குறைந்தபட்ச சம்பளத்தை வைத்து கணக்கிடுவோம்.


28% அகவிலைப்படி மீதான கணக்கீடு


28% அகவிலைப்படி என்ற கணக்கில், அடிப்படை சம்பளம் ரூ .18,000-ல், மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .60,480 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசினால், ஆண்டு சம்பள உயர்வு ரூ .23760 ஆக இருக்கும்.


1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000


2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .5040 / மாதம்


3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்


4. அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது - 5040-3060 = ரூ .1980 / மாதம் 


5. ஆண்டு சம்பளம் - 1980X12 = ரூ 23760


31% அகவிலைப்படியில் கணக்கீடு


இப்போது ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக மாறும். இப்போது ரூ .18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .66,960 ஆக இருக்கும். ஆனால் அதிகரிப்பைப் பற்றி பேசுகையில், ஆண்டு சம்பள அதிகரிப்பு ரூ. 30,240 ஆக இருக்கும்.


1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000


2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்


3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்


4. அதிகரித்த அகவிலைப்படி - 5580-3060 = ரூ .2520/மாதம் 


5. வருடாந்திர சம்பள உயர்வு - 2520X12 = ரூ. 30,240


ALSO READ: 7th Pay Commission: டி.ஏ. உயர்வுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR