7வது ஊதியக்கு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. பணியாளர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (ஒபிஎஸ்) பலனை அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அரசிடம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கோரி வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பலன்கள் குறைவாக உள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.


எப்போது முடிவு எடுக்கப்படும்?
மத்திய அரசு, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல் படுத்த பரிசீலித்து வருகிறது. டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும். இது குறித்து சட்ட அமைச்சகத்தின் பதிலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Aadhaar Card உண்மையானதா, போலியானதா? கண்டுபிடிப்பது எப்படி


எந்தெந்த பணியாளர்கள் பலன் பெறுவார்கள்?


மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் கூறும்போது, ​​'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மத்திய அரசு இந்த விவகாரத்தை சட்ட அமைச்சகத்தின் கீழ் வைத்துள்ளது. ஜனவரி 01, 2004 அன்று அல்லது அதற்கு முன் யாருடைய ஆட்சேர்ப்புக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதோ அந்த ஊழியர்களை என்பிஎஸ் வரம்பிலிருந்து விலக்குவது குறித்து நிதிச் சேவைகள் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன் (DoP&PW) சரியான முடிவை எடுக்கலாம். பிரச்சினை தீர்க்கப்பட்டால், ஓய்வூதியத்தில் பெரிய பலன் கிடைக்கும்.’ என்றார்.


பழைய ஓய்வூதிய பலன் யாருக்கு கிடைக்காது


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் மத்திய ஆயுதக் காவல் படைக்கு கிடைக்காது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகள் 1972ன் கீழ் துணை ராணுவப் பணியாளர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளைப் பெறுகின்றனர் என்றார் அவர்.


மேலும் படிக்க | குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன்களை வழங்கும் வங்கிகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR