7th Pay Commission முக்கிய செய்தி: விரைவில் கிடைக்கும் DA, TA, அரியர் தொகை, பதவி உயர்வு
ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபப்டியில் அதிகரிப்பு இருக்கும். இதனுடன், மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கவுள்ளன. இதில் பயண உதவித்தொகை மற்றும் நகர கொடுப்பனவு ஆகியவையும் அடங்கும்.
7th Pay Commission: அடுத்த 6 மாதங்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. ஊழியர்களின் மதிப்பீட்டு சாளரம் (Appraisal Window) ஜூன் இறுதி வரை திறந்திருக்கும். இதில் அவர்கள் தங்கள் சுய மதிப்பீட்டை வழங்க வேண்டும். இது தவிர, ஜூலை முதல் அகவிலைப்படி அதிகரிப்பின் (DA Hike) தவணை கிடைக்கத் தொடங்கும்.
அரசாங்கம் இன்னும் அகவிலைப்படியின் (Dearness Allowance) மொத்தம் மூன்று தவணைகளை அளிக்க வேண்டியுள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும் என்பது தெளிவாகிறது. இருப்பினும், கடந்த 18 மாத நிலுவைத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஊழியர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நேரத்தில் அரசாங்கம் இதை வழங்குவதற்கான மனநிலையில் இல்லை.
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்
ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபப்டியில் அதிகரிப்பு இருக்கும். இதனுடன், மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கவுள்ளன. இதில் பயண உதவித்தொகை (Travel Allowance) மற்றும் நகர கொடுப்பனவு (City Allowance) ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், ஓய்வூதிய பயனாக வருங்கால வைப்பு நிதி (Provident Fund) மற்றும் கிராச்சுவிட்டி ஆகியவற்றிலும் ஒரு பெரிய அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உள்ளது.
பதவி உயர்வுக்கு பிறகும் சம்பளம் அதிகரிக்கும்
அடுத்த 6 மாதங்களும் மத்திய ஊழியர்களுக்கு முக்கியமான காலமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த காலத்தில் பலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். ஜூன் மாதத்திற்குள் சுய மதிப்பீட்டை நிரப்பிய பிறகு, அதிகாரி மூலம் செயப்படும் மதிப்பாய்வு இருக்கும். இதற்குப் பிறகு கோப்பு முன்னோக்கிச் செல்லும். பதவி உயர்வுடன், ஊழியர்களின் சம்பளமும் (CG Employees Salary Hike) அதிகரிக்கும். இந்த மதிப்பீட்டின் மதிப்பீடு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு 7 வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி இருக்கும். இதற்கான வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை தொகுதியின் ஆன்லைன் ஹெச்.ஆர் சாஃப்ட் பிரிண்ட் சாளரத்தை EPFO தொடங்கியுள்ளது.
ALSO READ:7th Pay Commission: குடும்ப ஓய்வூதியத்தில் மிகப் பெரிய நிவாரணம், விதிகளில் மாற்றம்
நிலுவைத் தொகை பற்றிய நல்ல செய்தியும் வரக்கூடும்
2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான அரியர் தொகையும் (DA Arrear) தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது மூன்று தவணைகளுடன் அரியர் தொகையும் கிடைக்க வேண்டும் என ஊழியர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தற்போது மத்திய அரசு இதை வழங்குவதற்கான மனநிலையில் இல்லை. கொரோனா வைரஸ் காரணமாக அரசாங்க கருவூலத்தின் சுமை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக ஊழியர் சங்கம், நிதி அமைச்சகத்தின் கூட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. ஆனால், அதன் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அரியர் தொகையும் அளிக்கப்பட்டால், ஊழியர்களின் கணக்கில் ஒரு பெரிய தொகை வரும்.
அகவிலைப்படி இன்னும் 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) ஜூலை மாதம் செலுத்தப்பட உள்ளது. ஜனவரி 2020, ஜூன் 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகள் இதில் செலுத்தப்படும். ஆனால், இப்போது ஜூன் 2021 இன் டி.ஏ.வும் அதிகரிக்கப்பட உள்ளது. ஜூன் 2021 இல் 4 சதவீத டிஏ அதிகரிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இருப்பினும், இது பின்னர் அறிவிக்கப்படும், அது 4 சதவீதமாக அதிகரித்தால், மொத்த டிஏ 32 சதவீதத்தை எட்டும். ஆகையால் இந்த ஆண்டின் இறுதிக்குள், மத்திய ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும் என்பது தெளிவாக உள்ளது.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR