7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ வழங்கப்படுகிறது. இது 28 சதவிகிதமாக அதிகரிக்கும். பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2021, 02:00 PM IST
  • ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போகிறது.
  • 17% என்ற விகிதத்தில் கிடைக்கும் அகவிலைப்படி இப்போது நேரடியாக 28% ஆக மாறும்.
  • ஜூன் 2021 இன் அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட உள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வு title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது 17% என்ற விகிதத்தில் கிடைக்கிறது, இது இப்போது நேரடியாக 28% ஆக மாறும். சம்பள உயர்வு வடிவத்தில் இந்த அதிகரிப்பின் பயனை ஊழியர்கள் அடைவார்கள். 

நிலுவையில் உள்ள மூன்று தவணைகளும் கிடைக்கும் 
இது தவிர, ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், நிலுவையில் உள்ள தவணைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். மத்திய ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ வழங்கப்படுகிறது. இது 28 சதவிகிதமாக அதிகரிக்கும். பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். ஊழியர்கள் இரண்டு ஆண்டுகால டி.ஏ.வின் பயனை நேரடியாகப் பெற உள்ளனர். 

2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தது. இரண்டாம் பாதியில், அதாவது ஜூன் 2020-ல் இது 3 சதவிகிதம் அதிகரித்தது. இப்போது 2021 ஜனவரியில், அகவிலைப்படி மீண்டும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது இது மொத்தம் 28 சதவீதமாகிவிட்டது. இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் இதுவரை செலுத்தப்படவில்லை.

ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்குமா?
தற்போது, ​​மத்திய ஊழியர்களின் சம்பள மேட்ரிக்ஸ் படி, குறைந்தபட்ச சம்பளம் ரூ .18000 ஆகும். இதில், 15% அகவிலைப்படி சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சேர்க்கப்பட்டால், மாதத்திற்கு 2700 ரூபாய் நேரடியாக சம்பளத்தில் சேர்க்கப்படும். வருடாந்திர அடிப்படையில் (Dearness Allowance) பார்த்தால், மொத்த அகவிலைப்படி ரூ .32400 அதிகரிக்கும். அதாவது, ஊதிய மேட்ரிக்ஸின் படி, இப்போது ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 என்றால், அவரது சம்பளம் 18,000 x 2.57 = ரூ. 46,260 ஆகும். இந்த சம்பளம் தற்போது கொடுப்பனவுகள் இல்லாமல் உள்ளது. இப்போது இந்த சம்பளத்தில் அகவிலைப்படி (DA), பயண கொடுப்பனவு (TA), மருத்துவ இழப்பீடு மற்றும் எச்ஆர்ஏ போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும். அதன் பிறகு இறுதி சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

ALSO READ: 7th Pay Commission நற்செய்தி: வேரியபல் அகவிலைப்படியை அதிகரித்தது மத்திய அரசு

ஜூன் மாதத்திலும் 4% டிஏ அதிகரிக்கும்

ஜூன் 2021 இன் அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அதிகரிப்பும் 4% இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நடந்தால், ஜூலை 1 ம் தேதி மூன்று தவணைகள் செலுத்தப்பட்ட பிறகு, அடுத்த 6 மாதங்களில் மேலும் 4% டி.ஏ. ஊழியர்களுக்கு அளிக்கப்படும். அப்போது அகவிலைப்படி மொத்தம் 32 சதவீதத்தை எட்டும். தற்போது டி.ஏ 17% என்ற அளவில் அளிக்கப்படுகின்றது. ஒவொரு 6 மாதத்திலும் மத்திய அரசு இதில் மாற்றங்களை செய்கிறது. இதன் கணக்கீடு அடிப்படை ஊதியத்தை (Basic Pay) அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றது.  இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வெவ்வெறு டி.ஏ. கிடைக்கிறது.

அரியர் தொகை செலுத்தப்படாது

கோவிட் -19 காரணமாக, கடந்த ஆண்டு  2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை 1 வரை அரசாங்கம் அகவிலைப்படியை முடக்கியது. ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரனமும் ஜூலை 1, 2021 வரை அதிகரிக்காது. இந்த முடிவின் காரணமாக, 2021-2022 நிதியாண்டில் மொத்தம் ரூ .37000 கோடியை அரசு சேமித்துள்ளது. இருப்பினும், ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஜூலை 2021 இல் டி.ஏ மற்றும் டி.ஆர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்ன மாற்றம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News