அகவிலைப்படி உயர்வு சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி வெளியாகியுள்ளது. இது அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான செய்தியாகும். ஆகையால் ஊழியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அகவிலைப்படி அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படும். ஆனால், அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். ஏனெனில், புதிய ஆண்டில், புதிய ஃபார்முலா மூலம் அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர, மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்த வேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி தொடர்பான கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஏ உயர்வின் அடிப்படை ஆண்டில் (பேஸ் இயர்) மாற்றங்கள்


தொழிலாளர் அமைச்சகம் 2016 இல் டிஏ உயர்வின் அடிப்படை ஆண்டை (Base Year) மாற்றியது. ஊதிய விகிதக் குறியீட்டின் (WRI-Wage Rate Index) புதிய தொடர் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, அடிப்படை ஆண்டு 2016=100 உடன் புதிய தொடர்கள் 1963-65 -ன் அடிப்படை ஆண்டின் பழைய தொடரின் இடத்தைப் பெறும். 


டிஏ உயர்வு எவ்வாறு கணக்கிடப்படும்?


7வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படியின் அளவு தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்கி கணக்கிடப்படுகிறது. உங்கள் அடிப்படை ஊதியம் ரூ.18000 டிஏ (18000 x12)/100 எனில், தற்போதைய சதவீத விகிதம் 12% ஆகும். அகவிலைப்படி சதவீதம் = கடந்த கடந்த 12 மாதங்களின் CPI இன் சராசரி-115.76. இப்போது வரும் எண்ணிக்கை 115.76 ஆல் வகுக்கப்படும். அதன் பின் வரும் எண் 100 ஆல் பெருக்கப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு? 


டிஏ உயர்வுக்கு வரி செலுத்த வேண்டுமா?


அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது. இந்தியாவில் உள்ள வருமான வரி விதிகளின் கீழ், அகவிலைப்படி பற்றிய தனித் தகவல் வருமான வரிக் கணக்கில் கொடுக்கப்பட வேண்டும். அகவிலைப்படியின் பெயரில் நீங்கள் பெறும் தொகைக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.


பணியாளர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்?


7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளக் கணக்கீட்டிற்கு, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் டிஏ கணக்கிடப்படுகிறது. ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 26,000 என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவருடைய டிஏ கணக்கீடு 26,000-ல் 38% ஆக இருக்கும். அதாவது மொத்தம் ரூ.9,880 ஆக இருக்கும். 


அடுத்த அகவிலைப்படி உயர்வில், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதத்தை எட்டினால். ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.910 உயர்த்தப்படலாம். இது ஒரு உதாரணம்தான். இதேபோல், 7வது ஊதியக்குழு கணக்கீடுகளில் மற்ற மத்திய ஊழியர்களின் சம்பளமும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் அடிப்படை சம்பளத்தை வைத்து இதை ணக்கிடலாம்.


அகவிலைப்படி என்றால் என்ன?


அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்தாலும் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்க இது தொடங்கப்பட்டது. இந்த தொகை அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி முதன்முதலில் இந்தியாவில் 1972 இல் மும்பையிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு அகவிலைப்படி வழங்கத் தொடங்கியது.


அகவிலைப்படியின் வகைகள் என்ன?


அகவிலைப்படி (டிஏ உயர்வு) இரண்டு வழிகளில் வழங்கப்படுகிறது. தொழில்துறை அகவிலைப்படி மற்றும் மாறக்கூடிய அகவிலைப்படி (Variable dearness allowance). தொழில்துறை அகவிலைப்படி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் மாறும். இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் (PSU) பணிபுரியும் ஊழியர்களுக்கானது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வேரியபிள் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தம் செய்யப்படுகிறது. 


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?


ஜனவரி 2023 இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்புடன், டிஏ 42 சதவீதத்தை எட்டும். இருப்பினும், அதற்கான அறிவிப்பு எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், மார்ச் 2023ல் ஹோலியை ஒட்டி இது வழங்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வால், சுமார் 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் மாதத்திற்குள் அரசு ஊழியர்களுக்கு 5% டிஏ உயர்வு? முழு விவரம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ