உத்தர பிரதேச அரசின் அகவிலைப்படி உயர்வின் சமீபத்திய அப்டேட்: தீபாவளியன்று மாநில ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை வழங்க உத்தரபிரதேச அரசு தயாராகி வருகிறது. அதன்படி தீபாவளிக்கு முன்னதாக, உ.பி., அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தி  (DA) பரிசாக வழங்கப்படும். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின், இப்போது உ.பி., அரசின் நிதித் துறை, அதற்கான பணியை துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 12 லட்சம் ஆசிரியர்கள்-ஊழியர்கள் மற்றும் 7 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி  தலா 4 சதவீதம் அதிகரிக்கும். அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முந்தைய கால நிலுவைத் தொகையும் கிடைக்கும். இதற்கு, யோகி ஆதித்யநாத் அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு மே மாதம் அகவிலைப்படி உயர்வுக்கு யோகி அரசு ஒப்புதல் அளித்தது. ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி உயர்வுக்கான கோப்பு முதல்வர் யோகியின் (Uttar Pradesh CM yogi adityanath) ஒப்புதலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டது. மே 15 அன்று, டிஏ மற்றும் டிஆர் (DA - DR Hike) அதிகரிப்புக்கான கோப்புக்கு முதல்வர் யோகி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மத்திய ஊழியர்களுக்கு இணையாக மாநில ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


முன்னதாக கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு தற்போது மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலனை மாநில ஊழியர்களுக்கும் வழங்க உ.பி அரசு தயாராகி வருகிறது.


மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம், ஒவ்வொரு மாதமும் 9,250 ரூபாய் வருமானம் கிடைக்கும்


முதல்வர் யோகி தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் அமைச்சரவைக்கு கோப்பு அனுப்பப்படும். அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அரச ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இதன் பலனை வழங்க திட்டம் உள்ளது.


அடிப்படை சம்பள கணக்கீடு:
மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளதால், அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இந்த கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம். 


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்


புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640


அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900


புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி, தீபாவளிக்கு முன் டபுள் சம்பளம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ